Monday, September 4, 2017

பி.எஸ்.குமாரசாமி இராஜா

சாதிக்கு தான் மதிப்பு, 
நல்வர்களுக்கு இல்லை....

ஒரிசா கவர்னராக இருந்த குமாரசாமி  இராஜா  வர்களை காங்கிரசு கட்சி  தமிழகத்திற்கு முதல்வராக்கியது. பின்னர் அவரை அந்த பொறுப்பில் நீடிக்க அனுமதிக்கவில்லை. அதே காங்கிரசார்களால்  அப்பதவியை அவரே தூக்கிஎறிந்துவிட்டார்.அப்பழுக்கில்லாத ஒழுக்கமான உத்தமர் நாடாள இயலவில்லை. அப்படிப்பட்ட உத்தமரது  திருவுருவப்படம்  கூட  இன்று
சட்டசபையில் இல்லை. பின்னாளில் தற்போது அமைச்சர்கள் குடியிருக்கும்  கிரின்வேஸ் சாலை    குமாரசாமி ராஜா சாலை என்று பெயரிடப்பட்டது.  அதனில் பாதியை போதகர் தினகரன் சாலை என பகிர்ந்து  அளிக்கப்பட்டது. இப்போது ஊடகங்கள் கூட  கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள இல்லங்களில் ஊடக சந்திப்பு நடந்தது என்று கூறுகின்றார்கள்.  குமாரசாமி ராஜா சாலை என சொல்லாமல் பசுமை
வழி சாலை green ways road சொல்லாவது தவறு அல்லவா....?

அப்பழுக்கற்ற மனிதரின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டு அரசியலில் ஊழலற்றவர்கள் இல்லை என்று விமர்சனம் எழுதுகின்றார்கள்.  குமாரசாமி ராஜா அவர்கள் பெரிய வாக்குவங்கி அல்லாத பிண்னணியை கொண்ட காரணத்தால் கேட்பாரின்றி எளிதாக நினைத்து விட்டனர். அவரது சாதியினர் ராஜபாளையத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். ஒரு சாலைக்கோ, திட்டத்திற்கோ ஒருவரின் பெயரை வைக்க வேண்டும் என்றால் அவர் நல்லவராக வாழ்ந்தது  மட்டுமில்லாமல் பெரிய  சாதிப்புலமும் இன்று தேவைப்படுகின்றது. 

#குமாரசாமிராஜாசாலை
#கிரீன்வேஸ்சாலை 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
04-09-2017



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...