Friday, September 22, 2017

என்னுடைய தாயார் மங்கத்தாயாரம்மாள் ( வயது 97 )

அன்பு நண்பர்களுடைய பார்வைக்கு,

கடந்த 15/09/2017 அன்று அதிகாலை 6 மணிக்கு என்னுடைய தாயார் மங்கத்தாயாரம்மாள் ( வயது 97 ) காலமானார். அன்றைக்கு மறுநாள் கி.ரா.வின் நிகழ்ச்சியை 
நான் புதுவையில் பொறுப்பேற்று நடத்தவேண்டியிருந்ததால் அதி
காலையிலேயே சென்னையிலிருந்து விரைந்து வந்து இறுதிச் சடங்கையும், நல்லடக்கத்தையும் அன்றைய மாலையே முடித்துவிட்டு 16/09/2017 அன்று விடியற்காலையில்  புதுச்சேரியில் விழாவை நடத்த இருந்ததால் நண்பர்களுக்கும்,அரசியல்
தோழர்களுக்கும்சொல்ல
இயலவில்லை.சிலஉறவினர்களுக்கும்
சுற்றத்தார்களுக்கும்
சொல்லியிருந்தேன் கி.ரா அவர்களின் அகவை 95 விழாவினை புதுச்சேரியில் நான் முன்னின்று நடத்திய காரணத்தாலும்,  குடியரசு துணை.தலைவர் வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் , நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கி.ரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வாழ்த்து  செய்திகளை எனக்கு அனுப்பியிருந்த காரணத்தால் அடியேன் அதனை மேடையில் ஒப்படைக்க வேண்டிய கடமையும்,   கி.ரா அவர்களின் விழா எவ்விதத்திலும் சிறப்பு குறையாமல் நடத்த வேண்டிய, நடக்க வேண்டிய காரணத்தினால் அன்று மாலையே இறுதி சடங்குகளை முடித்துவிட்டுபுதுவைதிரும்பினேன். .கி.ரா.விழா மற்றும் வேறொரு முக்கிய நிகழ்வின் காரணமாக சொல்ல இயலவில்லை. அருள் கூர்ந்து என்று வருத்தத்தோடுதெரிவித்துக்
கொள்கிறேன். 

என்னுடைய தாயார் 97 வயது வரைக்கும் எனது கிராமத்திலுள்ள நிலபுலங்களையும் விவசாயத்தையும் கவனித்து வந்தவர். ஒரு விவசாய அதிகாரியை விட விவசாயத்  நன்கறிந்தவர். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் பாடல்களை அப்படியே சொல்லக்கூடியவர். கிட்டத்தட்ட எங்களுடைய பக்கத்து 
வட்டாரத்தில் 1940 காலகட்டத்தில் முதல் பட்டதாரியே என்னுடைய மூத்த சகோதார் உருவாக்கிய பங்கு என்னுடைய தாயாருக்கும், எனது தந்தை கே.வி. சீனிவாச நாயுடுவுக்கும் உண்டு. என்னுடைய தந்தையார் 1972 லேயே விவசாய போராட்டங்கள் நடந்த சமயத்தில் விவசாயிகள் மீது ஏவப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் கவலையிலேயே உயிரிழந்தார். அப்போது தான் நான் அரசியலிலே அடியெடுத்து வைத்த நாட்களாகும். 

அவர் இறந்து 45 ஆண்டுகளாயிற்று. அதன்பின் எங்கள் குடும்பத்தையும், எங்களுடைய வீட்டினையும், எங்களுடைய கிராமத்தில் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்புகளையும் எனது தாயார் செய்தார். அது மட்டுமல்ல, அக்காலத்தில் படிக்க வசதியில்லாதவர்களையும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து படிக்க உதவி 
செய்தவர்கள் எனது தாய் - தந்தை. என்னுடைய கிராமத்தில் முக்கிய விவசாய பயிர்களான நெல், கரும்பு, வாழை, மிளகாய், பருத்தி, சோளம், கம்பு போன்றவை நஞ்சை, புஞ்சையில் விளையக்கூடிய பயிர்களாகும். அவை அனைத்தையும் பக்குவமாக செய்தவர். எங்களைப் பொறுத்தவரையில் வறண்ட கரிசல் மண், குளத்துப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் தான் உண்டு. அதை முறையாக நீர் மேலாண்மையோடு பயிர்களை வளர்த்து சாகுபடி செய்தவர். 

எங்களுடைய வீடு அக்காலத்தில் அந்த வட்டாரத்தில் காங்கிரஸ் கேந்திரமாக திகழ்ந்தது. அதே போல என்னுடைய மாமனார்கள் கே. வரதராஜன், பெரும்பத்தூர் சங்கரப்ப நாயக்கர் ஆகிய இருவரும் சுதந்திராக் கட்சியின் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள். எங்களுடைய இல்லத்திற்கு நேருவின் நண்பரும், ஆந்திராவைச் சேர்ந்த பெயர்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். என்.ஜி. ரங்கா, பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ரா.கிருஷணசாமி நாயுடு,எஸ்.ஆர.நாயுடு,முன்னாள் அமைச்சர் கடையநல்லூர் மஜீத், முன்னாள் பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன், தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு போன்ற தலைவர்கள் எல்லாம் அடிக்கடி வரும்போது மதியமும், இரவும் 
எங்கள் வீட்டில் தான் சாப்பாடு உண்டு. அந்த காலக்கட்டத்தில் எரிவாயு உருளைகள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை எதுவும் கிடையாது. கல்உரலில் மாவு அரைத்து, சட்னியை 
அம்மியில் அரைத்துதான்  தயார் செய்த வேண்டும். அவ்வளவையும்  எனது தாயாரே தயார் செய்து உபசரித்ததையும,கைப்பாங்கு என்று சமையலையும் அடிக்கடி விரும்பி பாராட்டியதும் உண்டு. 

இந்த நிலையில் எனது தாயாரை இழந்த செய்தியை உரியபடி அனைவருக்கும் சொல்லியிருக்க வேண்டும். சொல்ல இயலவில்லை. ஆனால் உறவினர்கள், 
சுற்றத்தார் அனைவரோடு திண்டுக்கல், தேனி -கோவிந்தநகரம், விருதுநகர் எரிச்சநத்தம் - நடையநேரி, பேரையூர், கீழான் மறைநாடு,காக்கிவாடான்பட்டி, பெரும்பத்தூர், சங்கரன்கோவில், 
கோவில்பட்டி, சங்குட்டி, வெள்ளாகுளம் போன்ற சில ஊர்களில் உள்ள உற்றார், உறவினர்களுக்கு மட்டுமே சொல்ல முடிந்தது. கோவை, சென்னை, புதுவை, 
ஆந்திரத்தின் ராஜமுந்திரி, ஐதராபாத், விசாகப்பட்டிணம், பெங்களூரு, திருவணந்தபுரம், டெல்லி போன்ற தொலைதூர நகரங்களில் இருக்கும் உறவுகளுக்கு கூட சொல்ல இயலவில்லை. நண்பர்களுக்கு சொல்லவில்லை என்று சிலர் வருத்தப்பட்டனர். பொறுத்தருள வேண்டுகிறேன். 

இந்த செய்தியை கிரா -95 விழாவால் அறிந்த இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நல்லகண்ணு, ஜெனீவாவில் இருந்து 
வைகோ, நடிகர் சிவகுமார், சி.பி.எம் கட்சித் தோழர்கள், பழ, நெடுமாறன்,பிரபாகரன்,பொன்ராதாகிருஷ்ணன்,
தமிழருவி மணியன் போன்றவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

அலைபேசி மூலமும், நேரில் வந்து வருத்தை பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
21-09-2017

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...