Sunday, September 10, 2017

முதல் சமூக நீதியின் முதல்வர் ஓமந்தூரார்

சமூக நீதி கொள்கையில் ஓமந்தூராருடைய பணியை யாரும் பேசுவதுமில்லை, அடுத்தவர்களுக்கு சொல்வதுமில்லை. நீதிக்கட்சியில் வகுப்புரிமை ஆணைக்குப்பின் சென்னை ராஜதாணியின் பிரிமியராக (முதல்வர்) இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சமூக நீதியை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தென்னேட்டி விசுவநாதம் 1947 இல் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்த போது ஓமந்தூரார் தலைமையிலான அரசு அதை தோற்கடித்தது. 

அதுமட்டுமல்லாமல், அவர் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி இடஒதுக்கீடும் ஒதுக்கப்பட்டன. பிராமின் அல்லாதோர் 44% பிற்பட்ட வகுப்பினருக்கு 14% ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 14% ஆங்கிலோ இந்தியருக்கு 7% இஸ்லாம் மதத்தினருக்கு 7% பிராமணர்களுக்கு 14% என அவரது காலத்தில் இடஒதுக்கீடு அமைந்தது. இது தான் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான அடிப்படையும், முதல் ஆணையும் ஆகும். அப்போது ஓமந்தூராரை எதிர்த்து பலர் குரலெழுப்பினர். 
இவர் மீதான குற்றச்சாட்டுகளை நேருவிடம் அடுக்கினர். 
நேருவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் என்று கூறினார். 
ஆனால் நேருவின் வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு தான் இயற்றிய இடஒதுக்கீட்டு திட்டத்தை தைரியமாக நடைமுறைப்படுத்தினார்.

சென்னை வந்த காந்தியிடமும் ஓமந்தூராரை பற்றி இடஒதுக்கீட்டிற்கான பிரச்சனையை தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளாக வைக்கும் போது காந்தி அதற்கு செவி சாய்க்கவில்லை. 

ஏனெனில் ஓமந்தூராரை பற்றி காந்தி நன்கு அறிவார். அவர் முதல்வர் பதவியை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்துவிட்டு, "போங்கடா. போக்கத்த பசங்களா" என்று சொல்லிவிட்டு வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான சபையில் சென்று அமைதியாக தன் அறப்பணியை செய்தார். 

இப்போது சொல்லுங்கள் ஓமந்தூராரை சமூகநீதிக் காவலர் என்று சொல்ல வேண்டாமா? பெரியாருக்கு இணக்கமாகவும், பெரியாரின் பாராட்டுகளையும் பெற்ற நேர்மையான ஓமந்தூரார் வரலாற்றை ஏன் மறைக்கின்றோம். இன்றைக்குள்ள இளைஞர்களுக்கு ஓமந்தூரார் யாரென்று கூடத் தெரியாதது மிகவும் வேதனையான விடயமாகும். 


குறிப்பு: கசங்கிய ஆடையோடு எலிசபெத் இராணியை வரவேற்க சென்ற போது உடனிருந்தவர்கள், இப்படி கசங்கிய ஆடையோடு போறீங்களேனு கேட்டபோது, "இது தான் இந்தியாவுல ஆடையா மக்கள் போட்டிருக்காங்க. இதை அவங்க ஏத்துக்கலன்னா நான் வரவேற்கவே வரல" என்று தைரியமாக சொல்லி சென்று வரவேற்றபோது எடுக்கப்பட்ட படம்.

#ஓமந்தூரார்
#சமூகநீதி
#social_justice
#omandur_ramasamy_reddiyar
#ksrpostings
#KSRadhakrishnanpostings
10-09-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...