Friday, September 8, 2017

நெகிழ்ச்சியான தருணங்கள்


-------------------------------------
அன்புக்குரிய சிவகுமார் அவர்களின் இல்லத்தில் சில நிமிடங்களுக்கு முன்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களிடம் கேள்வி- பதில் பாணியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் காணொளியை அவர் எனக்கு காண்பித்தார். இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் இன்னும் சில தினங்களில் வெளிவரவிருக்கிறது. 

யார் வீட்டிற்கு வந்தாலும் வாசல்வரை வந்து விடை கொடுத்து  அனுப்புவது அவரின் உயரிய பண்பு. அப்படி கீழே வந்தபோது அவரின் 1960களில் வைத்திருந்த MSV 7080 எண் கொண்ட வாகனத்தின் முன் உள்ள வேல் இலச்சினை பார்த்ததும் அவரின் கந்தன் கருணை போன்ற திரைப்படங்கள் முன் வந்தது. அவரது வீட்டின் வாயிலில் நிறைய பன்னாட்டு உயர் ரக சொகுசு வாகனங்கள் இருந்தாலும், இந்த வண்டியைஅவருடைய புதல்வர் கார்த்தி கோவையில்  பழுது பார்த்து புதிய வண்டி போல நிறுத்தி இருந்தார். அதனுடன் நாங்கள் இருவரும் புகைப்படம் எடுத்து கொண்டு சில நிமிடங்களுக்கு முன் புறப்பட்டேன்.

#kSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-09-2017

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...