Tuesday, September 5, 2017

பொய்மையில் எங்கே வாய்மையை தேடுவது

"காசுக்கு ஓட்டு

கோடிகளுக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவிகள் விற்பனை

டைமிங்காக, ரைமிங்காக ஏற்ற இறக்கமாக பேசிவிட்டால் போராளி என்ற போக்கு

ஜாதிகளுக்கு ஒரு கட்சி

அதனால் ஞானசூனியங்கள் எல்லாம் தலைவர்கள்

ஊடகங்கள், ஏடுகளின் ஜாதிப் பற்றுகளும்

சில முட்டாள்களை முட்டுக் கொடுத்து தூக்கி சுமக்கும் ஏடுகளும், ஊடகங்களும்

தகுதியற்றவர்களின் சொந்த செலவில் முகஞ்சுளிக்கும் பேனர்களும், விளம்பரங்களும்

தகுதியே தடை

உழைப்பவனை உதறுவது

புரிதலுடன் சிந்திப்பவனை சீண்டிப் பார்த்து சீரழிப்பது

உழைப்பை பெற்றுக் கொண்டு அங்கீகரிக்க மறுப்பது

வியாபார அரசியல் லாப நோக்கர்களுக்கு பதவிகளும் பவுசுகளும்

வெட்டி வசனம் பேசும் மேடைப் பேச்சு வியாபாரிகள்

பொது வெளியிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள்

அவர்களை ஆண்டவனாக வணங்கும் இளைஞர்கள்

தகுதியற்றவர்கள் எல்லாம் தலைவர்களாக மதிக்கும் மக்கள் கூட்டம்

உள்ளதை உள்ளபடி பேசினால் திமிர்பிடித்தவனாக தீண்டப்படாதவனாக பார்ப்பதும்

இயற்கையின் அருட்கொடையான மணலையும், வனத்தையும், நீராதாரத்தையும் கொள்ளையடிப்பது"
இப்படியான நிலையில் எப்படி நாடு சிறக்கும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்....
எப்படி வாய்மையே வெல்லும்....

எல்லாம் நாடக மேடையாக இருக்கும்பொழுது யதார்த்தங்களும் உண்மைகளும் எப்படி வெளிப்படும்.

நல்லவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள்

நதிநீருக்காக 30 ஆண்டுகாலம் உச்சநீதிமன்றம் வரை போராடி உத்தரவு பெற்ற அடியேனுக்கே இம்மாதிரியான நிலைகள்
இதற்கும் பெயர் ஜனநாயகம்.

#பொய்மையில்_எங்கே_வாய்மையை_தேடுவது
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
04-09-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...