Friday, September 29, 2017

அன்பு நண்பர்களுக்கு,

அன்பு நண்பர்களுக்கு,

இதுவரை  கடந்த 28 ஆண்டுகளில் நான் எழுதிய 18 நூல்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. இதில் கீழ்காணும் சில நூல்கள் மறுபதிப்பாக வெளிவர இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 

இதை எதற்கு தங்களின் பார்வைக்கு வைக்கிறேன் என்றால், இது குறித்தான தரவுகள்/வரலாற்று செய்திகள் ஏதாவது தங்களிடம் இருந்தால் இந்த நூல்களில் அந்த செய்திகளை தங்களுடைய பெயரில் சேர்க்கலாம் என விரும்புகின்றேன். 

எந்த படைப்பும், எழுத்தும் ஆதாரத்தோடு நண்பர்களிடம் பெற்று தான் முழுமையாக்க முடியும் என்ற நம்பிக்கையில் இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.  

1. ‘நிமிரவைக்கும் நெல்லை’ நான்காவது பதிப்பை 2 தொகுப்பாக வெளியிட உள்ளேன். 
2. தமிழகம், இன்றைய எல்லைகள் அமைந்து 50 ஆண்டுகள் நிறைவு விழாவில் வெளியிட்ட ‘தமிழ்நாடு 50’ என்ற நூல் 2வது பதிப்பாக தமிழகம் என்று வெளிவரவுள்ளது.
3. தினமணியில் 1979ல் இருந்து நடுப்பக்க கட்டுரைகளும், தி இந்து, ஆனந்த விகடன், கல்கி, ஜனசக்தி, கலைமகள், ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், டைம்ஸ் ஆப் இந்தியா, எக்கனாமிக் டைம்ஸ் போன்ற ஏடுகளில் வெளியான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளை தொகுப்பாக வெளிவர இருக்கின்றது. 
4. இரண்டாவது பதிப்பாக கரிசல் காட்டில் கவிதைச் சோலை பாரதி என்ற நூலும்
5. பண்டிதமணி. ஜெகவீராபாண்டியனார் 1950 இல் எழுதி வெளியிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வரலாறு பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் என்று தொகுப்பாசிரியராக இருந்து நான் தொகுத்துள்ள 900 பக்கங்கள் கொண்ட நூல்
6. நான்காவது பதிப்பாக நான் எழுதிய ‘கனவாகிப் போன கச்சத்தீவு’ என்ற நூல்
7. இரண்டாவது பதிப்பாக தூக்கு தண்டனை குறித்து ‘தூக்கு தண்டனையை தூக்கிலிடுவோம்’ என்ற என்னுடைய ஆய்வு நூல்
8. மத்திய, மாநில உறவுகளை குறித்தான புதிதாக வெளியிடப்படும் நூல்
9. தமிழகத்தின் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்ட வரலாறு குறித்தான நூல்
10. ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தான இரண்டாவது பதிப்பான ஆய்வு நூல் (தமிழ்/ஆங்கிலம் இருமொழிகளிலும்)
11. தமிழக நதிநீர் சிக்கல்கள், 850 பக்கங்களில் புதிதாக வெளிவரவுள்ளது.

மேற்கண்ட நூல்களை குறித்தான தரவுகள் ஏதாவது இருப்பின் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன். 

rkkurunji@gmail.com



நன்றி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#கேஎஸ்இராதாகிருஷ்ணன்_படைப்புகள்
#கேஎஸ்இராதாகிருஷ்ணன்_நூல்கள்
28-09-2017

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...