உச்சநீதிமன்றத்தில் தேசிய நதிநீர் இணைப்பு குறித்து எனது வழக்கில்(WP(Civil ) no 668/2002 on the file of Supreme Court- Judgement dtd 27-2 -2012 )நான் பெற்ற தீர்ப்பை வாசித்து விட்டு ராஜஸ்தான் முதல்வர் வசந்த ராஜ் சிந்தியா , ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர (சீமாந்திரா )முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தொடர்பு கொண்டு தீர்ப்பின் முழுவிவரம் கேட்டறிந்தனர்.
கடந்த முப்பது ஆண்டுகளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுக்கள், சமர்ப்பித்த ஆவனங்கள், தீர்ப்பின் சாரம்சங்களை எங்களுக்கு அனுப்புங்கள் என்றனர்.நாளைய சந்ததியினருக்கு நன்மை உண்டாக்கும் என நம்புவோம் என பேசியது திருப்தி அளித்தது.
இந்த நதிநீர் இணைப்பால் அதிக பயனடைய இருப்பது தமிழகமும், ராஜஸ்தான் மாநிலமும் தான்.
ஆனால் தமிழகத்தில் உள்ள களப்பணியில், அரசியல் தளத்தில் உள்ளவர்கள் என சொல்லி கொள்ளவர்கள்,பேசிவரும் ட்வீட்டர் நாயகர்களும், வாய்ச்சொல் சூப்பர் வீரர்கள் எவரும் இதுகுறித்து விசாரிக்க கூடவில்லை.சமூகம் பற்றிய சிந்தனை உண்மையாக இருக்குமேயானால் நடிகைகளுக்கு ஆர்மிகள் அமைப்பதை சிலாகித்துக் கொண்டிருப்பவர்களிடம் நதிகளுக்கு பாதுகாக்க வருவார்கள் என எதிர்பார்ப்பது என் தவறு தான்.
இப்பவும் ஒரு கூட்டம் இந்த பதிவை பார்த்து " ஜப்பான்ல ஜாக்கிச்சான் கூப்ட்டாஹ, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்டாஹ " என கேலியாக பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். புறந்தள்ளி விட்டு பொதுப்பணி நோக்கி பயணப்படுகின்றேன்..
No comments:
Post a Comment