Friday, September 29, 2023

#*எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும்Vsநம்மாழ்வார் என்ற விவாதம்*… #*ஜேசி.குமரப்பா* #*பசுமைப்புரட்சி கர்த்தாக்கள் யாவர்?* *சில நேரங்களில் அறிவியலுக்கும் அரசியலுக்குமான வேறுபாடுகளும் உண்டு*.




—————————————
தமிழ்நாட்டில் எம் எஸ் சுவாமிநாதனுக்கும்  நம்மாழ்வார் இருவருக்கும் இடையே ஒரு முரண்பாட்டை வைத்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இருவரும் நம்மிடையே இப்போது இல்லை. பசுமைப் புரட்சி ஒரு கேடான வினை. ஆம்  உண்மைதான். அன்றைய சூழல்….




பசுமைப் புரட்சி கொண்டு வந்தது எம்.எஸ்.சுவாமிநாதன் மட்டுமல்ல அன்றைய பிரதமர் இந்திராகாந்தி மற்றும் உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் தலைமையில் எம்.எஸ்.சுவாமிநாதன் , பி. சிவராமன் மற்றும் நார்மன் இ.போர்லாக் ஆகியோருடன் இணைந்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற இந்திய பசுமைப் புரட்சியை அவர் முன்னெடுத்தார் .  பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதில் சி.சுப்ரமணியம் ஆற்றிய பங்கிற்காக, 1998 ஆம் ஆண்டில், இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது .

ஆனால்,காந்திஜியின் நெருங்கிய சகாவான ஜே சி குமரப்பா பற்றி யாரும் இங்கு பேசுவதில்லை.  அவர்தான் இயற்கை சுயசார்பு விவசாயம் பற்றி மிகப் பெரிய ஆய்வையும் அதற்கான நூல்களையும் நடைமுறைக்கு ஏற்றவாறு எழுதியும் பேசியும் வந்தவர். தன் சக காந்திஜியிடமே செலவு கணக்குகளை மறுத்தவர் . பணம் தர முடியாது என்று கறாராகச் சொன்னவர்.எளிமையை மட்டுமே வாழ்நாள் சபதமாக கொண்டவர்.

மறைந்த எம் எஸ் சுவாமிநாதன் ஆதரித்தோ மறுத்தோ பேசியும் எழுதியும் கொண்டிருக்கும் சில எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் முற்றும் உணர்ந்த மத்திமர்கள் இதன் பின்புலத்தையோ அறியாதவர்கள்.  சில நேரங்களில் அறிவியலுக்கும் அரசியலுக்குமான வேறுபாடுகளும் உண்டு.

#எம்_எஸ்_சுவாமிநாதனுக்கும்Vsநம்மாழ்வார்_என்ற_விவாதம்…#ஜேசி_குமரப்பா #பசுமைப்புரட்சி_கர்த்தாக்கள் #சி_சுப்ரமணியம் #greenrevolution #MSSwaminathan

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-9-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...