Thursday, September 14, 2023

திமுக ஆட்சியில் தமிழத்தில் 12 நாட்களில் 40 கொலைகள்….உண்மையா? Tamilnadu law and order

திமுக ஆட்சியில் தமிழத்தில் 12 நாட்களில் 40 கொலைகள்….உண்மையா?
இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மட்டும், 40க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. முன் விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு வீச்சு, ரவுடிகளின் அராஜகங்கள் தினமும் நடக்கும் நிலையில், முதல்வரும், அவரது மகனும் ஏதேதோ பேசி, மக்களை திசை திருப்பி வருகின்றனர்.

தி.மு.க., ஆட்சியில், போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்கள் சிக்கி உள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என, பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன.

அ.தி.மு.க., மதுரை மாநாடுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமல், போலீஸ் வேடிக்கை பார்த்தது. 

இரு தினங்களுக்கு முன், சென்னை, பனையூர் பகுதியில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியிலும் இதே நடந்தது.இதன் காரணமாக, கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வரின் வாகன அணிவகுப்பும், நெரிசலில் சிக்கிக் கொண்டது. இது, தி.மு.க., அரசின் காவல் துறை தோல்வியை காட்டுகிறது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்