Thursday, September 28, 2023

பேயாழ்வார் தன்னை பெருந்தமிழன் அழைத்து கொள்ளும் பாசுரம்

பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலை என வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

முதன்முதலில் பேயாழ்வார்தான் தன்னை "பெருந்தமிழன்" என்று அழைத்து கொள்கிறார். வைணவம் தமிழுக்கு எவ்வளவு செழுமை சேர்த்து உள்ளது பாருங்கள்.

இந்த பாசுரத்தை எங்காவது நமக்கு கற்பித்து உள்ளார்களா? என்றால் இல்லை. தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவன்களின் கட்டுரை மற்றும் அவர்தம் படைப்புகளை படித்து மனம், மொழி, உணர்வுகளை நச்சு ஆக்கி கொண்டோம்.

இதோ பேயாழ்வார் தன்னை பெருந்தமிழன் அழைத்து கொள்ளும் பாசுரம்
.
யானேதவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது !”


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...