Sunday, September 3, 2023

#சனாதனம் #TamilNadu -Sanatan

*Minister without knowing constitutional consequences… also his ministerial oath* 
*உதயநிதி ஸ்டாலின் பேச்சு*….

Article 25 of Constitution of India gives your right to choose your religion.Article 26 gives you right to defend and propogate your religion.

What to do? Tamil Nadu minister without knowing about Constitution, who had taken oath to protect constitution and Nation.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த அறிவு ஜீவி இப்படி பேச எழுதிக்கொடுத்தார் என தெரியவில்லை. இந்து மதத்தை கொசு, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டுப் பேசுவதா? மத நல்லிணக்கம் கேள்விகுறியா…? இவரின் தாய் கோவில்- குளம், என சென்று பூஜை, புனஸ்காரங்கள் செய்வது ஏன்? அருகில் தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சரை வைத்துக்கொண்டு பேசுவது எப்படி? It is fit case quo warranto (writ -நீதிப் பேராணைகள் வழியாக, நீதியை உச்சநீதி மன்றத்திலோ(அரசியலமைப்பு உட்பிரிவு(-பிரிவு 32 வழியாக), உயர்நீதி மன்றத்திலோ (பிரிவு-226 வழியாக)பெற முடியும். சனாதனம் என்பது இந்து மதத்தில் ஏற்றுக்கொண்ட நம்பிக்கை என்றழைக்கப்படுகிறது. 

முதலில் அரசின் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் இருவர் பங்கேற்கும் ஒரு விழாவில் பலர் நம்பும் ஒரு விஷயத்தை ஒழிப்போம் என்று கூறுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதுவும் சத்திய பிரமாணம் எடுத்து நான் நடுநிலையோடு என் பதவியில் அதிகார துஷ்பிரயோகம்.

சனாதனம் மட்டும் அல்ல திராவிடம், கலைஞர்கருணாநிதி, உதயசூரியன், உதயநிதி எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்தான். சமஸகிருத எதிர்க்கும் கனிமொழி தன் மகனுக்கு வைத்த பெயர் ஆதித்யா… இதுதான் இவர்களின் போக்கு.

#சனாதனம் 
#TamilNadu

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...