Tuesday, September 19, 2023

#*இந்தியா கனடா உறவு மோசமடைகிறது* #*கொந்தளிப்பில் முதிர்ச்சியடையாத கனடா பிரதமர் ஜஸ்டின்ட் ரூடோ,** #*இந்திய தூதரை வெளியேற்றியது கனடா* *கடந்த கால சில நிகழ்வுகள்*



————————————
"ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியத் தலைவரின் கொலைக்கு இந்திய ஏஜெண்டுகள்  திட்டமிட்டனர்" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய தூதரக அதிகாரியை கனடாவில் இருந்து வெளியேற்றினார்.

"இ இந்தியாவை "வடகொரியா" வைப் போல ஒரு முரட்டு நாடாக மாற்றுகிறது" எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 

இந்தியா விடுதலை பெற்ற காலம் முதல் 
அமெரிக்கா,ரஷ்யா மற்ற நாடுகளின் உறவை
போல கனடா உடன் பெரிய நட்பு இருந்தது இல்லை. இவர்கள் விடுதலைக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலை நம்பியவர்கள். சர்ச்சில் இந்தியாவையும் காந்தியையும் வச படியவர்.காமன்வெல்த் அமைப்பிலும்  கனடா நமக்கு பெரிதாக உறவு காட்டியதும் இல்லை.

இந்திரா காந்தி படு கொலை செய்யப்பட்ட போது அவரின் படங்களை கனடாவில எரிக்கபட்டது என செய்திகள் வந்தன. அங்கு பிரதமர் ராஜிவ் காந்தி மீதும் எதிர்வினைகள் ஆற்றினர்.

தற்போது ட்ரூடோ.

 •திருமணம் முடிந்தது
 •ஜக்மீத்துடனான நட்பு விகாரமானது
 •சர்வதேச தனிமைப்படுத்தல்
 •G20 இல் கவனிக்கப்படவில்லை
 •உலகளாவிய ஊடக விமர்சனம்
 •விமானம் முறிவு
 •மோடியின் கண்டனம்
 •அரசியல் நிச்சயமற்ற தன்மை
 •வீட்டில் புகழ் குறைவது தொழிலை அச்சுறுத்துகிறது

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா- இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஹர்தீபை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது.

இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹர்தீப்நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ம் தேதி, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல ஆண்டுகளாக, நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது. காலிஸ்தான் அமைப்பு இந்தியாவிற்கு எதிராக, போஸ்டர் ஓட்டுதல், போராட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது: ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறினர் என அபத்தமாக பேசியுள்ளார்.

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது.

கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜூலி கூறியிருப்பதாவது: ''ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம்.

அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் தலைவராக செயல்பட்டவர்'' என்றார்.

இது குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது: கனடாவில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் சட்ட ரீதியிலான நடவடிக்கை தேவை. கனடா அரசு எடுத்த நடவடிக்கை தவறானது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். அதைப் பற்றியே இப்போது பேச வேண்டும்.

இந்த விஷயத்தில் கனடா அரசின் செயலற்ற தன்மை கவலையாக உள்ளது. இவ்வாறு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே, கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது.

ஆனால் இந்த வித்தை அவரை காப்பாற்றாது.

 சவூதி அரேபிய மற்றும் சீன ஜனாதிபதி கூட பல சந்தர்ப்பங்களில் அவரை இழிவுபடுத்தியுள்ளனர். இந்த பையன் வெளிநாடுகளுடனான கனடாவின் உறவை கெடுக்க நரகத்தில் முனைந்துள்ளார்.

கானடாவில் மற்றொரு நாட்டின் உளவாளிக்கு உள் நுழைந்து கொலைச் செய்யலாம் என்ற அளவிற்கு அந் நாட்டின் பாதுகாப்புத் துறை உள்ளதா?


#*இந்தியா_கனடா_உறவு_மோசமடைகிறது
#ஜஸ்டின்ட்ரூடோ

#கேஎஸ்ஆர்போஸ்ட்
 #ksrpost
 19-9-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...