அரசிற்குப் புலிகள் சம்பந்தமான பல இரகசியங்களைக் காட்டிக்கொடுத்து, போராட்டத்தையும் அதன் கட்டமைப்பையும் நிர்மூலமாக்கத் துணை நின்றனர்.
"நிறைய மக்கள் இறந்தால் உலக நாடுகள் தலையிடும், அமெரிக்கா நேரடியாகக் களம் இறங்கும்" என்ற தவறான, போலியான இராஜதந்திரத் தகவல்களைப் புலிகளின் தலைமைக்கு வழங்கி, பெருமளவு மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒன்றுகூடவும், அவர்கள் கொன்றொழிக்கப்படவும் காரணமான 'அரசியல் மேதாவிகளும்' இதில் அடங்குவர். ஆயுதக் கொள்வனவில் மிகப்பெரிய ஊழல்களைச் செய்து, தரம் குறைந்த ஆயுதங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு, அந்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இலங்கை கடற்படைக்கே கசியவிட்டு, கப்பல்களை மூழ்கடித்த புலம்பெயர் தமிழர்களும் உண்டு. இதன் மூலம் முழு நஷ்டத்தையும் இயக்கத்தின் தலையில் கட்டிவிட்டு, இன்சூரன்ஸ் மற்றும் கமிஷன் பணத்தில் கொழுத்தவர்கள் இன்றும் வெளிநாடுகளில் தம்மை ஈழ உணவாளர்கள் போல காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் நமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவும், முள்ளிவாய்க்காலில் நமது உறவுகள் அநாதரவாகக் கொல்லப்படவும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தவர்களே ஆவர். ஆண்டுக்கு ஒருமுறை சிரட்டைக் கஞ்சி குடித்துவிட்டு, உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இழந்த மண்ணையோ, மக்களுக்கான நீதியையோ நாம் பெற்றுவிட முடியாது. நம்மைச் சுற்றி இருக்கும் இத்தகைய துரோகிகளையும், சுயநல சக்திகளையும் அடையாளம் கண்டு புறக்கணிப்பதே, மடிந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். வரலாறு எவரையும் மன்னிக்காது; குறிப்பாகத் துரோகிகளை அது ஒருபோதும் மன்னிக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment