#முன்னாள்முதல்வர்ஸ்டாலின்அவர்களே! (2)
————————————————————- “எதையும் மறைக்க வேண்டாம் என்னிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்” என்று ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலைமைகளுக்குக் காரணம் என்ன என்று முதல்கட்டமாகச் சிலவற்றை நான் சொல்லியிருந்தேன்.அதன் இரண்டாம் கட்டமாக சில விடயங்கள் இருக்கிறது. உண்மையில் நான் ஒரு பழைய திமுக காரன் என்பதால் இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது. 1)தமிழ் தமிழ் என்று முழங்கிக் கொண்டிருந்தீர்கள்! ஆட்சிக்கு வந்த பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்துங்கள்! உங்களுக்கு அதற்கு அனுமதி கிடைக்கும் என்று சொன்னேன்! நடத்தினீர்களா? கலைஞருக்குக் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது!ஆயினும் நான் சொன்னேன் என்பதற்காக அதைப் புறக்கணித்தீர்கள்! உங்களிடம் நான் நேரடியாகச் சொன்னேன். அதைத் தட்டி கழித்தீர்கள்! தரம் தெரியாமல் அவ்வளவு எளிதாக என்னை எடுத்துக் கொண்டீர்கள். 2)தென் மாவட்டங்களில் இருந்து லாரிகளில் நீர் சொட்டச் சொட்ட கேரளத்திற்கு மணலைக் கடத்தினார்கள்! அது குறித்து நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா?! அவற்றின் பின்னணியில் இருந்ததெல்லாம் யார்! அதேபோல் பல இடங்களில் கனிம வளங்களை பாதாளம் வரை தோண்டி எடுத்துச் சென்றார்களே அவர்களைக் கண்டித்தீர்களா! அதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? 3)இயற்கை சுற்றுச்சூழல் சார்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் இருந்து வந்த தாக்கீதுகளுக்கு முறையான நடவடிக்கையை எடுத்தீர்களா? 4)ஐந்து ஆறு வயது சிறுமிகளில் இருந்து 70 வயது மூதாட்டிகள் வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்களே முறையான இரும்புக்கரம் கொண்டு அதையெல்லாம் ஒடுக்கினீர்களா!? உங்கள் ஆட்சியின் போது 7000 க்கும் மேலான பாலியல் வழக்குகள் வந்திருக்கிறது. அதற்காக வெட்கப்பட்டீர்களா? 5)காவல் நிலைய மரணங்கள் மட்டும் 36 நடந்திருக்கிறது! அதற்கான நீதி விசாரணைகள் என்ன ஆனது!? சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்களுக்கு நீங்களும் உங்கள் தங்கையும் போராட்டத்தில் குதித்தீர்களே! உங்கள் ஆட்சி நடந்தபோது அதை வேடிக்கை பார்த்தீர்களா!? 6)பல்லாயிரக்கணக்கான (7000+) கொலைகள் பட்டப்பகலில் சாலைகளில் நீதிமன்றங்களில் நடந்த போதெல்லாம் அந்த ரவுடியிசத்தை கூலிப்படைகளை நீங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்கினீர்களா? 7)அமைச்சர்கள் பலரும் மகிழ்ச்சியாக வலம் வந்தார்களே! இதெல்லாம் நிரந்தரம் என்று நம்பிக் கொண்டு திரிந்தார்களே! அதெல்லாம் உங்கள் பார்வைக்கு வந்து அது குறித்து நீங்கள் வருத்தப்பட்டதெல்லாம் உண்டா!? 8 ) நாளை 17, ஈழத் தமிழர் பிரச்சனையில் யாரும் செய்ய முடியாத வகையில் உங்களை அதிலிருந்து உயர்த்தித் தூக்கிப்பிடித்தோமே அந்த நன்றி கடனையாவது என்னிடம் காட்டினீர்களா!? 9)இதே காங்கிரசை ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக இன்றைக்குத் திட்டுகிறீர்கள்! உங்கள் ஆட்சியின் போது அமைச்சர் கண்ணப்பன் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார்! நான் ஏதோ ஒரு டியுட் போட்டதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்கினீர்களே! அது என்ன நியாயம்!? 10)அது மட்டுமல்ல திருச்செந்தூர் போன்ற கோயில்களில் உங்கள் மருமகன் யாகம் செய்ய போதும், உங்கள் துணைவியார் எல்லோரும் தரிசனம் காண்பதற்குச் சென்றபோது பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்து தனிப்பட்ட முறையில் சன்னிதானத்தில் பூஜை செய்து விட்டு வந்த அதிகாரத்தை எல்லாம் யார் கேள்வி கேட்பது! அது மட்டுமல்லாமல் உங்கள் துணைவியார் எல்லா கோயிலுக்கும் செல்லும் போதும் அங்கு உள்ள அமைச்சர்கள் அரசியல் சாசன அமைச்சரவையில் உறுதிமொழி எடுத்திருப்பவர்கள் என்றில்லாமல் தாங்கள் ஒருஅரசு ஊழியர் என்று பாராமல் அவர்களுக்கு முதல் மரியாதை செய்தார்களே அது எந்தச் சட்டத்தில் சேர்த்தி! புரோட்டாகாலில் இதெல்லாம் வருகிறதா? இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள்! #DMK #tamilnadupolitics #திமுக #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/share/r/1PTzsCBWac/?mibextid=wwXIfr
https://www.facebook.com/share/r/1PTzsCBWac/?mibextid=wwXIfr
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment