ஜன கன மன அதி எனும் நம் இந்திய தேசியகீதம் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வங்கமொழியில் எழுதப்பட்டது. அதேபோல வந்தே மாதரம் பாடலை பக்கிங் சந்திர சட்டர்ஜி ஆனந்த மடத்தில் வைத்து வங்க மொழியில் தான் எழுதினார் ! இதையெல்லாம் தெரியாமல் ஐஆர் எஸ் பயின்றுள்ளதாகக் கூறிக்கொள்ளும் அமைச்சர் திருச்செங்கோடு அருண்ராஜ் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இது ஏதோ சமஸ்கிருதத்தில் பாடப்பட்டதாகவும் இந்த பாடலின் பின்னணி என்னவென்று தெரியாமல் பாடப்படுவது போல அவர் போக்கில் எதையோ சொல்லுகிறார். இவரெல்லாம் தமிழ்நாட்டுக்கு அமைச்சர் ஆவார் என்று கனவா கண்டோம்! இன்னும் என்ன எல்லாம் செய்யக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை!? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை!
என்றாகி விட்டது. ••• இந்தக் கொடுமை ஒருபுறம் இருக்க மாற்றுக் கட்சியில் இருந்து வந்து த வெ க வில் இணைபவர்கள் கட்சித் தலைவர் முன்பாகத்தான் வந்து மேடையில் இணைவதாகச் சொல்லி விழா எடுப்பார்கள்! ஆனால் இங்கு எல்லோரும் ஆதவ் அர்ஜுனாவின் முன்னிலையில் இணைகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல்!!!! "ஒரே நாடு ஒரே தேர்தல்" கட்டாய தேவை என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்பது இன்றைய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா செய்ததன் மூலம் உணர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட உரிமையை பறிக்கும் விதமாக கட்சி தாவல் தடை சட்டம் வந்தது. மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி செய்வது புறந்தள்ள பட்டு கட்சியின் பிரதிநிதிகள் மக்களை ஆட்சி செய்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் மதசார்புடன் செயல்பட்டாலும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்த பிறகும் கூட தமிழக வெற்றி கழகம் தனது பெரும்பான்மை எண்ணிக்கையை தொடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வருந்தத்தக்கது. எதிர்க்கட்சியாக நின்று பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தகுதியை கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் இன்றோடு இழந்து விட்டதாகவே கருதுகிறேன் இது மிகுந்த குழப்பத்தை உண்டாக்குகிறது. எல்லாவித அறிக்கைகளையும் பேட்டிகளையும் ஆதவ் அர்ஜுனாதான் கொடுக்கிறார்!அரசுத் திட்டங்கள் குறித்து அவர் மட்டுமே பேசுகிறார். முதல்வர் விஜய் நடுக்கத்துடனே காணப்படுகிறார். அவர் மிகுந்த மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை? பல எம்எல்ஏக்களின் பெயர் யாருக்கும் தெரியவில்லை! •••@ நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்து 15 நாட்கள் தான் ஆகிறது? மிக மோசமான விளைவாக இதற்குள் நாடெங்கும் 24 கொலைகள் நடந்து முடிந்திருக்கின்றன. அத்துடன் நான்கு இரட்டைக் கொலைகள். 19 பாலியல் குற்றங்கள். சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு வருவதற்குரிய வழிகள் எழுதும் தெரியவில்லை!? ஆதவ் அர்ஜுனா வேறு வகையான பேரங்களை முடித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லப்படுகிறது. துவக்கத்திலேயே இவ்வளவு பிரச்சனைகள் என்றால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த விளைவுகள் நீடிக்கப் போகிறது!?இவற்றையெல்லாம் சமாளித்து விஜய் எப்படிக் கொண்டு போகப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! #tvkrule #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment