தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதிமுகவின் கேள்விகளுக்கு அறிவுச்சார்ந்து பதிலளிக்க வேண்டும் என்றால், உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அறிவுச்சார்ந்த SCRIPT WRITER இருப்பது போல், நீங்களும் ஒரு திறமையான அறிவுச்சார்ந்த SCRIPT WRITER-ஐ வைத்துக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி, துண்டு சீட்டு இல்லாமல் பதில் சொல்ல தெரியவில்லை என்பது வேதனையானது. குறிப்பாக, சட்டமன்றத்தில் தங்களின் நிலைப்பாட்டை கூறவே, துண்டு சீட்டு இல்லாமல் இரு தலைவர்களுக்கும் பதில் சொல்ல தெரியவில்லை என்பதை என்னவென்று சொல்வது! ஒரு அரசியல் கட்சியின் தலைவனுக்கு செய்தி தாட்கள், ஏடுகள், புத்தக வாசிப்பு பழக்கம் என்பது எவ்வளவு முக்கியம். எல்லாவற்றையும் கூட அறிந்துக்கொள்ள தேவையில்லை, தங்களது கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் குறித்தாவது துண்டு சீட்டு இன்றி பேச பழகி கொள்ளலாம் இல்லையா? இதனை முதலமைச்சர் விஜயும், உதயநிதி ஸ்டாலினும் எப்பது புரிந்துக்கொள்வார்கள்? இதுபோன்ற இடங்களில் தான் அறிவுச்சார்ந்த மனிதர்களை இழக்கிறோம். பத்திரிகையாளர்கள் (உண்மையான பத்திரிகையாளர்கள்) சுற்றி நின்று கேள்வி கணைகளை வீசினாலும், சற்றும் அசராமல் ஒரு மணி நேரமானாலும் பதில் சொல்லக்கூடியவர்கள் பலர் இங்கு உள்ளனர். ஏனென்றால் அவர்கள் புத்தகங்கள் வாசிப்பவர்கள். இதுபோன்ற மனிதர்களை சட்டமன்றம் இழந்து விட்டது என்பது பேரிழப்பாகும். இதே முதலமைச்சர் விஜய் அறிவு , களப்பணிகள் கொண்டவர்கள சட்டப்பேரவையில் இருந்திருந்தால், உதயநிதி ஸ்டாலின் கதி என்னவாகியிருக்கும்? திமுகவின் நாடகங்கள் அம்பலமாகி இருக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment