நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பேன்! தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராகி இருப்பேன்! என்று நடிகர் ரஜினிகாந்த் இப்போது சொல்லுகிறார்!
உங்களின் தீவிர ரசிகர்களையும் அண்ணன் தமிழருவி மணியன் போன்றவர்களையும் நம்ப வைத்து கட்சியை தொடங்க அனைத்துப் பணிகளையும் செய்ய வைத்து அதற்கான எல்லா தயாரிப்புகளும் முடிந்த நிலையில் அவர்களை ஏமாற்றி அரசியலுக்கு வர மாட்டேன் என்று ஏன் ஜகா வாங்கினீர்கள் ரஜினிகாந்த்! தைரியமாக வந்திருக்க வேண்டியதுதானே! உங்களைத் தடுத்தது யார்! இப்போது சொல்கிறீர்கள் வந்தால் நூறு சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன் என்று!உங்கள் வரவை எதிர்பார்த்து தானே உங்கள் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்! சென்னை வள்ளுவர் கோட்டத்தில்! எல்லாம் உங்களை அரசியலுக்குள் வரச் சொல்லி உண்ணாவிரதம் எல்லாம் ஏற்பாடு ஆகியும் அதையும் தடுத்து நிறுத்திய தாங்கள் இப்போது இப்படி பேசுவது நியாயமா? எல்லாவற்றுக்கும் உச்சமாக “நான் நிறைய சம்பாதித்து விட்டேன் தமிழ்நாட்டு மக்களுக்காகச் சேவை செய்யப் போகிறேன்’ என்றெல்லாம் சொன்னீர்களே!வந்திருக்க வேண்டியது தானே! உங்களை யார் தடுத்தார்கள்! திமுக தரப்பிலிருந்து உங்களுக்கு தடை விதித்தார்களா? உண்மையைச் சொல்லுங்கள்! தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது மாதிரி இப்பொழுது வந்து கர்ஜனை செய்கிறீர்கள்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!. தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு “மீன் துறையும் அம்பலமும் காத்திருந்தவனுக்குத்தான்” @JunioVikatan r #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
ஆடித்திருநாள் 18-ம் பெருக்கு அனைவருக்கும் நலமே பெருகட்டும். *** ஆடிப்பெருக்கு பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருக...
No comments:
Post a Comment