உதயநிதி ஸ்டாலின் அவர்களே!
சனாதன மேட்டர்... இன்னும் திருந்தவில்லையா நீங்கள்? ஏற்கனவே உச்சநீதிமன்றம் உங்களை எச்சரித்து உள்ளது. வெறுக்கத்தக்க பேச்சு என்று பதிவு செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை...ஒரே இடத்தில் நடத்த கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்றுள்ளீர்கள். அந்த வழக்கில் பெயிலில் உள்ளீர்கள் என நினைக்கிறேன். அப்படி இருந்தும் மீண்டும் அதே வார்த்தையை சட்டமன்றத்தில் பயன்படுத்தி வெறுப்பை ஏற்படுத்துகிறீர்கள். சட்டமன்றத்தில் பேசியதற்கு வெளியே வழக்கு போட முடியாது என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். ஆனால்... உங்களுடைய இந்தமாதிரி பேச்சுக்கள் தான் உங்கள் தந்தையை தலையில் துண்டை போட்டு வீட்டில் உட்கார வைத்துள்ளது என்பதை மறவாதீர்கள். முதலில் சனாதனம் உங்கள் வீட்டில் அடுப்பங்கறையில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டுள்ளது! அதை அணைக்க துப்பு இல்லாமல்.... பெரும்பான்மை மக்களின் உணர்வுகளோடு மீண்டும் மீண்டும் விளையாடாதீர்கள். உங்கள் மனைவி கிறித்துவர். எனவே நீங்கள் கிறித்துவராக மாறியது பற்றி யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் உங்கள் தாயார்... கோவில் கோவிலாக சென்று.... உங்கள் வெற்றிக்கும்... உங்கள் தந்தையின் வெற்றிக்கும் வேண்டிக் கொண்டு சனாதனத்தை உங்கள் வீட்டுக்கு உள்ளேயே....ஆழமாக விதைத்து வருகிறார். அவரை நிறுத்தச் சொல்ல உங்களுக்கு திராணி உள்ளதா? நீங்கள் சொல்வதை உங்கள் வீட்டுப் பெண்களே கேட்க மாட்டார்கள் என்றால்...நாட்டு மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசுவது உங்களுக்கே கேவலமாக இல்லையா? திருந்துங்கள் சார். மீண்டும் மீண்டும் வெறுப்பை விதைக்காதீர்கள். துணை முதலமைச்சர் பதிவியிலிருக்கும் போது இப்படி உளறிக் கொட்டித்தான் பெற்ற தந்தையை வீட்டில் உட்கார வைத்து விட்டீர்கள். இப்போது எதிர்கட்சி தலைவர் பதவிக்கு வந்து... மீண்டும் மீண்டும் எரிச்சலை ஏற்படுத்தி....இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராதபடி குழி தோண்டி புதைத்து விடுங்க….. சொல்ல துணிச்சல் இல்லையா…. எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும், ஜாதிப்பிரிவுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் ‘சனாதனம் ஒழிக’ என்ற கோஷத்தின் மூலம் குறிப்பிட்டதாகச் சொன்னால், அதை நேரிடையாகத் தமிழிலேயே சொல்ல ஏன் தயக்கம்? அதை எதற்காகாத் தனக்கே பொருள் விளங்காத ஒரு வடமொழிச் சொல்லால் குறிப்பிட வேண்டும்? அந்த வடமொழிச் சொல்லுக்கு அது அர்த்தம் இல்லையே! எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதை யாரும் சொல்லத் தேவையே இல்லை. அது நம் அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவின் பிரகடனம். அதை மீறும் எந்தச் சட்டமும், நடவடிக்கையும் செல்லத்தக்கவை அல்ல. தங்கள் மதத்தை சனாதன தர்மம் என்றே சிலர் குறிப்பிடுவது உண்மை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர்களுடைய ஆன்ம விசாரணை, உலகியல் கடந்த பார்வை, இருவேறு உலகத்து இயற்கையில், “அவ்வுலகம்” என்று திருவள்ளுவப் பெருமான் பேசியவாறு பரம்பொருள் பற்றிய ஆராய்ச்சி, இவையெல்லாம் எந்த ஓர் ஆசிரியரிடமிருந்தோ, நூலில் இருந்தோ தொடங்காமல், வரலாற்றுக்கு மிகமுந்தைய காலம் தொட்டே இருந்து வருவதைக் குறிக்க. இன்னொரு காரணம், பண்டைய பாரதத்துக்கு வெளியே இருந்தவர்கள் பாரதவாசிகளை அழைத்த “இந்து” என்ற பெயரில் தங்கள் கோட்பாட்டைக் குறுக்கிக் கொள்ள விரும்பாமை. ‘சனாதன தர்மம் ஒழிக’ என்றால், நிரந்தரமான தர்மத்தை ஒழிப்பேன் என்று பொருளா? அல்லது, சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்தை ஒழிப்பேன் என்று பொருளா? எதையும் வெளிப்படையாகப் பேசுங்கள் வீரர்களே। இந்து மதம் ஒழிக என்று முழங்குங்கள். அல்லது, அழிவற்ற அறம் ஒழிக என்று கூவுங்கள். அல்லது, ஜாதிகள் ஒழிக, பெண்களை முக்காடிட்டு வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கும் பெண்ணடிமைக் கோட்பாடுகள் ஒழிக என்று உரக்கச் சொல்லுங்கள். மூடி மறைத்துப் பேசுவது ஏன். துணிச்சல் இல்லையா?? “ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்” என்றுதான் நான் கூவிக் கொண்டே இருக்கிறேன். அதைச் செயலாக்கக் கூடிய அதிகாரத்தில் இருந்தவர்கள் அதை ஒழிக்கவில்லையே! பிறகு ஏன் இந்த கோஷம்? ஏன் இந்த வெளிவேஷம்? உடனே அரசியல் வாதிகள் அனைவரும் ஜாதிகளை ஒழிக்க, எல்லாரும் ஒரே ஜாதிதான் என்று அறிவிக்கத் திரளட்டும். அதுவே என் கோரிக்கை. செத்த பாம்பை அடிக்கும் வீரர்களே, ஒருஜாதி எதிர்ப்பை ஜாதி எதிர்ப்பாக மாற்றுங்கள். வீரத்தைச் செயலில் காட்டுங்கள். துணிச்சல் இல்லையா? #சனாதனம்
Subscribe to:
Post Comments (Atom)
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment