நேற்றுக் கேரள முதல்வர் வி. டி.சதீசன் பதவியேற்றார். பதவி ஏற்கும் போதே இறைவன் பெயரிலோ அல்லாஹ்வின் பெயரிலோ அல்லது இயேசுவின் பெயரிலோ அவர்களின் விரும்பி வன்னம் பதவி ஏற்கலாம். ஆனால் கையெழுத்துப் போடும் போது புனித சிலுவையைப் போட்டுக்கொண்டுக் கையெழுத்து இடுகிறார். மதச் சார்பின்மை என்று காங்கிரஸ்காரர்கள் நெடுநாள் சொல்லி ஏமாற்றுவார்கள்! மதச்சார்பில்லாமல் இங்கு ஒன்றும் நடக்காது! சீக்கிய மதத்தின் மேல் கை வைத்த போது என்ன நடந்தது என்பதை யோசிக்க வேண்டும்!
உண்மையில் அது மதச்சார்பின்மை (secularism )அல்ல! அதை மத நல்லிணக்கம் ( communal harmony)என்று தான் சொல்ல வேண்டும்.! அப்படி இருக்கையில் அவர்கள் சொன்ன மொழியில் பார்த்தாலும் கூட புனிதச் சிலுவையை போட்டுக்கொண்டு கேரள முதல்வர் பதவி ஏற்கலாமா? அதேபோல சதீசன் அவர்களது சகோதரனின் மகனோ மகளோ இஸ்லாத்தில் திருமணம் செய்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.! உண்மையா என்று தெரியவில்லை.!இந்திய யூனியன் முஸ்லிம் லீக் IUML நிர்பந்தத்தால் மூத்த தலைவர் ராமேஷ் ராமகிருஷ்ணன் சென்னிதலா ,கே சி வேணுகோபாலுக்கு செல்ல வேண்டிய முதல்வர் பதவி அதாவது அங்குள்ள சிறுபான்மையினரின் அழுத்தத்தால் ஜீனியர சதீசனுக்குச் சென்றுள்ளது! அப்படிப் பார்த்தால் இதில் மதம் தானே முன்னிலை வகிக்கிறது?! நிலவரப்படி பார்த்தால் கர்நாடகத்திலும் கிறிஸ்துவம் அதிவேகமாகப் பரவி வருகிறது! ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தில் அதாவது ராஜசேகர ரெட்டி காலத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பைபிள் அச்சடிக்கப்பட்ட வாசகங்களைக் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு வந்தது! இது காங்கிரசுக்கு நல்லதா? ராகுல் காந்தி பாஜக பற்றி அது இது என்று ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்? வேற்றுமையில் ஒற்றுமை வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லிச் சொல்லி ஒரு சில மதங்களின் பாற்பட்ட கவனத்தை அனுசரிக்காமல் நடந்து வரும் விளைவுகளின் மேல் கவனம் இல்லாமல் நடந்து வரும் ஊடுருவல்களைப் பற்றி மெத்தனமாக இருந்து கொண்டு இவர்கள் சொல்லும் மதச்சார்பின்மை என்பது உண்மையில் இதுதானா? #keralapoltics #Congress #RameshChennithala #VDSatheesan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment