இது எனது பதிவு அல்ல….
#வாசுதேவநல்லூர் பகுதி மக்கள் பதிவு ———————————————————————————- #திருவைகோ அவர்களுக்கு ஒரு சாமானிய செண்பகவல்லி ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கேள்வி?? வரும் ஜீன் 5 ம் தேதி மதிமுக சார்பில் செண்பகவல்லி தடுப்பணை சீரமைக்க வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் என பத்திரிகை செய்தியை பார்த்தோம் ஏன் தலைவரே ,போன ஐந்து வருடம் என்ன செய்தீர்கள்?? தமிழகத்தில் உங்கள் கூட்டணி ஆட்சி கேரளத்தில் உங்கள் சகாவு பினராய் ஆட்சி இப்ப ஆட்சி முடிந்ததும் மீண்டும் செண்பகவல்லி அரசியலா??? செண்பகவல்லி தடுப்பணை தொடர்பாக திரு. ரவிச்சந்திரன் அவர்கள் போட்ட வழக்கினை மதுரை உயர்நீதிமன்ற வழக்கு எண் WP(MD)1260/2015 மனுதாரராகிய இவரது தம்பி திரு வை.ரவிச்சந்திரன் அவர்கள் கடந்த 2019- ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் எந்த நிபந்தனையின்றி வழக்கினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்து வழக்கினை வாபஸ் வாங்கிய செய்தியை பொதுக்குழுவில் சொல்லாமல் நிலுவையில் உள்ளது என தவறான தகவலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என பொது மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.எத்தனை ஆண்டுகள் தான் இப்படி ஏமாற்றுவீர்கள். செண்பகவல்லி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம் சும்மா இருந்தால் போதும் செண்பகவல்லி சீசன் அரசியல் பேச்சு இனி எடுபடாது தலைவரே !!! #செண்பகவல்லிஅணை #ShenbagavalliDam
Subscribe to:
Post Comments (Atom)
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment