Friday, May 29, 2026

விலகிச்செல்பவர்கள்

 விலகிச்செல்பவர்கள்

மீண்டும் மறுமுறை திரும்பாமலேயே இருக்கட்டும் ஒருமையில் அழைத்துப் பழகியவர்களை பன்மையில் அழைக்க என்னமோ போலிருக்கிறது பரிச்சையமான வாசனைதான் இருந்தும் மறுமுறை முகர்கையில் மூச்சு முட்ட வைக்கிறது பற்றியிருந்த கரங்கள்தான் ஆனாலும் என்ன மீண்டும் புதிதாய் பற்ற அவ்வளவு கூச்சமாக இருக்கிறது ஒரு பிரிவு நமது வழமைகளை மாற்றி விடுகிறது பழக்கங்களை மாற்றி விடுகிறது விருப்புவெறுப்புகளை மாற்றி விடுகிறது இன்னும் ஒரு பிரிவு கொண்டாடித்தீர்த்தவர்களை அந்நியமாக்கி சற்று தொலைவினில் நிறுத்தி விடுகிறது ஆக விலகிச்செல்பவர்கள் மனம் மாறி மீண்டுமொரு முறை திரும்பாமலிருப்பதே எல்லோருக்கும் நல்லது உண்மையில் எல்லாவற்றையும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்குதல் எப்போதும் சாத்தியமாவதில்லை



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC