Tuesday, March 3, 2015

பெ.நா. அப்புசாமி - P N Appuswamy

நேற்றைக்கு திரு. பி.ஏ கிருஷ்ணன் அவர்கள் தன் முகநூல்பக்கத்தில் பதிவிட்டிருந்த, நெல்லைமண்ணின் முக்கியப்புள்ளியான
பெ.நா.அப்புசாமி அவர்களைப் பற்றி பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவைப் பார்த்தபோது கவனத்தை ஈர்த்தது.

அந்தப் பதிவு :-

 “This is what P N Appuswamy says in his preface to the book 'Tamil Verse in Translation' which is a collection of his translation of selected poems from Sangam literature: "I am a Kaucika on the parental side and Gargya on the maternal, both of which are clans of the North India. Those clansmen had migrated south in those far off days of two thousand years ago, had made Tamil their mother tongue, and had attained such proficiency in it that over half a dozen of their verses have been included in the ancient anthologies. I proudly claim that these ancient clansmen of mine were among the earliest integrators of our great country which, in languages, dwelt in gracious amity with each other, in a spirit of rivalry perhaps, but in a spirit of animosity never. Languages comingled with each other, and freely took ideas from a common pool.. and enriched each other. That all mankind is kin were not words which came not from the tip of the tongue, but from the depths of the heart."
Appuswamy, an atheist, was a great scholar of Tamil and Sanskrit. He was also a pioneer of popular science in the early days.”

-   Ananthakrishnan Pakshirajan.

எனது ”நிமிரவைக்கும் நெல்லை” நூலில் பெ.நா.அப்புசாமி பற்றிய பதிவைக் கீழே தந்துள்ளேன்.

பெ.நா.அப்புசாமி

 “மாணவர் பருவத்திலிருந்தே அறிவியலில் நாட்டம் கொண்டவர் பெ.நா.அப்புசாமி. மாதவையா இவரி சிறிய தகப்பனார். 95ஆண்டுகள் வாழ்ந்த அப்புசாமி  முடிந்தவரை சைக்கிளிலேயே சென்னை நகரில்  பயணம் செய்வார். இவருடைய கட்டுரைகள் கலைமகள், ஆனந்தவிகடன், வீரகேசரி, கலைக்கதிர், தினமணிச்சுடர், ஆகிய ஏடுகளில் வெளிவந்துள்ளன.

ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை பிற்பகல் இவருடைய மயிலை சித்திரைக்குளம் இல்லத்தில், ராஜாஜி, டி.கே.சி, கல்கி, எஸ்.வையாபுரிப்புள்ளை, வாசன், ஏ.என்.சிவராமன், கி.வா.ஜ.,
 ராகவ அய்யங்கார், ரா.பி.சேதுபிள்ளை. அ.சீனிவாசராகவன், கி.பட்சிராஜன், ஆர்.ராகவ அய்யங்கார், டி.எல்.வெங்கட்ராம அய்யங்கார், நாராயணசாமி அய்யங்கார் ஆகியோர் கூடி தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள்.

 சுமார் 30க்கும் மேலான நண்பர்கள் கூடிக்கலையும் இந்தச்சந்திப்பு  இரவு எட்டுமணி வரைக்கும் நிகழும். சிற்றுண்டியும், காபியும், குளிர்பானங்களும் அப்புசாமி அவர்களின் துணைவியார் வழங்குவார். டி.கே.சியின் வீட்டு தோசைக்கு இணையாக சிற்றுண்டி இருக்கும்.

இவருடைய ஆலோசனையின் பேரில் கலைமகள் பத்திரிகையை நாராயணசாமி அய்யர் தொடங்கினார். இலக்கியத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும்,  இசையிலும்  ஆர்வம் கொண்டவர் பெ.நா.அப்புசாமி.  சட்டக்கல்லூரியில் படித்த நாட்களில் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கடி பெங்கேற்றிருக்கிறார். 70வயதுவரை இறகுபந்து விளையாடினார்.

அவருடைய கையெழுத்து அழகாகவும், தெளிவாகவும் இருக்கும். அவர் பாராட்டுபெறாத அறிஞர்களே இல்லை என்கும் அளவுக்கு பல துறைகளில் சிறந்துவிளங்கினார்.  இவருடைய புதல்வியார் பாளை மேட்டுத்திடலில் அமைந்துள்ள காந்திமதி அம்பாள் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அப்புசாமி அவர்கள் அறிவியல் செய்திகளை எளிய தமிழில் எடுத்துச் சொல்லும் பாங்கு அலாதியானது. சமகாலத்தில் சுஜாதாவும், தன் படைப்புகளில் அறிவியல் குறிப்புகளை அனாயாசமாக வெளிப்படுத்தி இருப்பார்.

அக்காலத்தில், அதாவது 1950-60களில் தமிழில் அறிவியலைப்பற்றி ஆர்வம் எடுத்துக்கொண்டு எழுதியவர்கள் சிலரே, அதில் பெ.நா.அப்புசாமி கோவையிலிருந்து , மறைந்த ஜி.ஆர்.தாமோதரன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட கலைக்கதிர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெ.நா.அப்புசாமியின் நண்பர் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை மறைந்த போது அப்புசாமி அவர்களின் எழுதியது :
“ 1956 பிப்ரவரி 18ம் நாள் சென்னை அடையாறு காந்திநகரை அடுத்த கால்வாயின் கரையிலே மூட்டிய ஈமத்தீயிலே வையாபுரியின் பூதவுடலோடு அவன் கண்ட கணவுகள் யாவும் அழிந்துபோயின என்பதும், சிறந்த தமிழ்ச் சங்க இலக்கிய மூலப்பதிப்பும், சிறந்த ராமாயண முழுப் பதிப்பும், சிறந்த முத்தமிழ் இலக்கியமும், வரலாறும் என் கண்களின் முன்னே என் மனம் வெதும்ப சாம்பலும் புகையுமாக அன்று மைறைந்து போயின என்பதும் உண்மை.” என்றார்.

அப்புசாமி அவர்களின் பள்ளிகாலத்தில்  வையாபுரி பிள்ளை, கா.சு.பிள்ளை, நீலகண்டசாஸ்திரி, தாவுசா ஆகியோர் ஒருசாலை மாணக்கர்களாகத் திகழ்ந்தனர்.

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் தொடர்பும் பெ.நா. அப்புசாமிக்கு இருந்தது. அவரின் நிறுதிக்காலத்தில் நெல்லை நண்பர்கள் ஒருங்கிணைந்து அவருக்குச் சிறப்பான பாராட்டுக்கூட்டத்தை நடத்தினார்கள்.  தன் கடைசிநாளில் அவரே எழுதிய கடிதத்தை “தி இந்து” நாளிதழுக்குத் தபாலில் அனுப்பிவிட்டு வரும் பொழுது காலமானார். அக்கட்டுரை மறுநாள் இந்துவில் வெளியானது. ”
நூல் : நிமிரவைக்கும் நெல்லை 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...