Saturday, March 14, 2015

நீண்டகால கோரிக்கையான நெல்லை வன உயிரின சரணாலயம் உதயம் Sanctuary_in_Nellai_District

நீண்டகால கோரிக்கையான நெல்லை வன உயிரின சரணாலயம் உதயம்  #sanctuary_in_Nellai_District






தமிழகத்தின் பெரிய சரணாலயமாக நெல்லை வன உயிரின சரணாலயம் மற்ற சரணாலயங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு 35,673ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட இருக்கின்றது.

ஏற்கனவே தமிழகத்தில் 14 வன உயிரின சரணாலயங்கள், 5 தேசியப் பூங்காக்கள், 14 பறவைகள் சரணாலயங்கள், 4 புலிகள் காப்பகங்கள்,
4 யானைகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோள் காப்பகங்கள் உள்ளன.

வனவளத்தோடு, சுற்றுச் சூழலும் இணைத்து உயிர்ப்பன்மையும், தாவரங்களும் விலங்கினங்களும் இணைந்த பரப்பாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இந்த சரணாலயங்கள் அமைய உள்ளது.

ஏற்கனவே மேற்குத் தொடர்ச்சி மலையின்தென்பகுதியில்
பெரியார் புலிகள் சரணாலயம் மற்றும் தேனிமாவட்டம் மேகமலை பகுதியிலும் சரணாலயங்கள் அமைக்கும் நிலை உள்ளது.

இதன் தென்பகுதியில் துவங்கி சதுரகிரி மலை, சிவகிரி, வாசுதேவநல்லூர், திருமலைநாயக்கன் புதுக்குடி, கிருஷ்ணாபுரம், கடையநல்லூர், புளியறை, குற்றாலம் அங்கிருந்து முண்டந்துறையோடு இணைத்து  களக்காடு வரை பசுமைமாறாமல் ஒரு தொடர்ச்சியாக பல்லூயிர்கள் வாழும் பகுதி அமைய இருப்பது நீண்ட நாள் கோரிக்கையின் விளைவாகும்.

நெல்லைமாவட்டப் பகுதியில் ஒருசில பகுதிகளில் தான் பழங்குடியினர் வசிக்கின்றனர். இது அதிகம் மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 22,877சதுர கிலோமீட்டர் வனபகுதியில் 2,948 சதுர கி.மீ அடர்ந்த இருண்ட காடுகள் அடங்கிய பகுதியாகும்.

வனங்களுக்குள் மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தால் வன உயிர்களான புலியோ, சிறுத்தையோ, யானையோ, மானுட வசிப்பிடங்களுக்கு வலசை மாறி வராது. அதேபோல மனிதனும் வேட்டையாடுவது, மரங்களை வெட்டுவது என்று பேராசையில் இயற்கையை அழிக்கும் போது கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களையும் திருத்த வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...