தமிழகத்தில் நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டு அதில் பணியிலிருந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நோக்கியா ஆலையினைத் திரும்பத் திறக்க முயற்சி எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நோக்கியா ஆலை மூடப்பட்டதால் ஏறத்தாழ 30,000பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000பேர் நேரடியாக வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இந்த ஆலை மூடப்பட்டதால் மறைமுகமாக 25,000பேர் வருமானம் இழந்து தவிக்கின்றனர்.
இந்த நோக்கியோ ஆலையில் வேலைவாய்ப்பு கிடைத்தவுடன் பலர் கடன் வாங்கி ஆலைக்கு அருகே, திருப்பெரும்புதூரில் வீடுகள் கட்டி நிரந்தரமாக்க் குடியேறினார்கள். ஆலைமூடப்பட்ட நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. நோக்கியா ஆலை மீண்டும் திறக்கப்படுவது பற்றி கொடுத்துள்ள உறுதி காப்பாற்றப்பட வேண்டியதோடு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசு இந்த ஆலை மூடப்படுவதை தடுக்க எந்த முயற்சிகளும் மேற்கொள்ளாமல், இதே ஆலையினை ஆந்திரா-தமிழக எல்லையில் உள்ள தடாவில் நிறுவமுயற்சிக்கும்போது கைகட்டி வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருந்தது. தற்போது மத்திய அரசின் தலையீட்டில் ஆலை திறக்கப்படுவது வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment