சோசியலிஸ்ட்டும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சகாவுமான
ராம் மனோகர் லோகியாவுக்கு நாளை 105வது பிறந்தநாள். 1910ல் பிறந்து 1967ல் தனது 57வது வயதில் காலமானார். இன்னும் பலகாலம் அவர் வாழ்ந்திருக்கவேண்டும்.
இந்நாளில் அவரைக்குறித்த ஆவணப்படம் அவர் இறந்து 47ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் வெளியிடப்படுகிறது. ராம் மனோகர் லோகியா
சிறந்த நாடாளுமன்றவாதியாவார். காங்கிரஸ் ஆட்சிகாலங்களில் நேருவின் அரசை ஆக்கப்பூர்வமாகவும், தாக்கம் ஏற்படும் வகையிலும் விமர்சிப்பார்.
இவர் பேச எழுந்துவிட்டாலே காங்கிரஸ் அமைச்சர்கள் அச்சம் கொள்வார்கள். பண்டிதர் நேருவே லோகியா என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்போடு உற்று கவனிப்பார். நேருவுக்கு நண்பராகவும் இருந்தார். நாட்டு விடுதலைக்குப் பின் நேருவின் கொள்கைகளை ஆணித்தரமாக எதிர்க்கவும் செய்தார்.
எந்த பிரச்சனையானாலும் தெளிவாகச் சிந்தித்து அதைக்குறித்து படம்பிடித்துக் காட்டி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பேசக்கூடிய ஆற்றல் பெற்ற பேச்சாளரும் கூட. எளிமையான வாழ்வு அவருடையது படோபடங்கள் பந்தாக்கள் எதுவும் கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட சீடர்கள் தான் இன்றைய நிதீஷ்குமார், முலாயம்சிங் யாதவ்,லல்லுபிரசாத் யாதவ் போன்றவர்கள்.
அவருடைய சப்த கிரந்தி தத்துவத்தில் (ஏழு போராட்டங்கள்) ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்பதற்கு முதலிடம் தந்தார். "ஒருவன் பிறருக்கு எதை உபதேசிக்கிறானோ, அதை கண்டிப்பாக அவனே நடைமுறையில் செய்து அந்த உபதேசங்களைத் தானே முதலில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்." என்பார்
1964ல் அமெரிக்காவுக்குச் சென்றபோது வெள்ளையரல்லாத கருப்பர் என்ற காரணத்தால் அவரை அங்குள்ள உணவு விடுதிக்குள் அனுமதிக்க மறுத்த அமெரிக்க வெள்ளையர்களின் இனவெறியை எதிர்த்து அங்கு போராட்டத்தைத் தொடங்கினார் டாக்டர் லோகியா. அதனால் அவர் அங்கு சிறையிலடைக்கப்பட்டார்.
லோகியா அவர்கள் சிறை செய்யப்பட்டதை அறிந்த அமெரிக்க அதிபர் லிண்டன்.பி. ஜான்ஸன் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அப்போது டாக்டர் லோகியா அனுப்பிய பதிலில் "அமெரிக்கஅதிபர் அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்குப் பதிலாக நியூயார்க் நகரில் அமெரிக்க மக்களால் நிறுவப்பட்டுள்ள "சுதந்திர தேவிச் சிலை"யிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளட்டும். எந்தக் கொள்கைகளுக்காக அந்த "சுதந்திரச்சிலை" நிறுவப்பட்டதோ அந்தக் கொள்கைகளை தற்போது அமெரிக்கர்கள் பின்பற்றுவதில்லை" என்று எழுதினார்.
டாக்டர். ராம் மனோகர் லோகியா அவர்கள் தனது ஏழுபுரட்சிகளில் ஒன்றாகத் தனி மனிதனிடம் அளவுக்கதிகமாகச் செல்வம் குவிவதை எதிர்த்தும், மக்களிடையே திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்குவதுடன் பொருளாதார வளர்ச்சியும் சமத்துவமும் ஏற்படச் செய்வதை ஆதரித்தும் போராட வேண்டுமென்றார். நாடு முழுவதும் மக்கள் அவ்விதப் போராட்டங்களில் ஈடுபட வேண்டுமென டாக்டர் லோகியா கூறினார்.
ஒரு நாட்டுக்கு எதிராக வேறொரு நாடு சுரண்டலில் ஈடுபடுவதற்கு எதிராகவும் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்றார். நமது நாட்டில் பல அரசுகள் புதிதாக வருகின்றன. ஆண்டுவிட்டுச் சென்றுவிடுகின்றன. ஆனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கெதிரான போராட்டங்கள் எந்த அளவிற்கு நடைபெற வேண்டுமோ, அந்த அளவுக்கு நமது நாட்டில் நடைபெறவில்லை. இன்றைக்கும் லோகியோவின் வாக்கு பொறுத்தமாகவே அமைந்துவிட்டது.
சிவப்புக் கம்பளங்கள் விரிக்கப்பட்டு, பன்னாட்டி நிறுவனங்கள் படையெடுத்து விட்டன. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு அடியெடுத்துவைத்து 20ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
India for Sale என்ற நிலையில் இந்தியாவைத் திரும்பவும் வெளிநாட்டவர்கள் கையில் சென்றுவிடுமோ என்ற அச்சம்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
ராம் மனோகர் லோகியா ஓர் ஆளுமை, ஓர் கம்பீரம், நாட்டு விடுதலைக்கும் காங்கிரஸ்காரர்கள் போல போராட்டத்தில் சிறைக்குச் சென்றவர். கடந்த 2010ல் இவருடைய நூற்றாண்டு விழாவில் நாடே அறியும் வகைல் இவருடைய சோசியலிச சப்த கிரந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்கின்ற நிகழ்வுகள் திருப்தியாக நடத்தப்படவில்லை என்ற வேதனை பலருக்கும் உண்டு.
வேடிக்கை என்னவென்றால், குஷ்புவுக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும் பத்திரிகைகள் லோகியோ போன்ற ஆளுமைகொண்ட தலைவர்களைப் பற்றி எழுத மனம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
எதிலும் நியாயமற்ற முறைகளும் விளம்பரங்களும் தகுதியற்றவர்களுக்கு பதவிகளும் வழங்கப்படுவதால் தான் நாட்டில் இளைஞர்கள் “என்னடா பொல்லாத அரசியல்” என்று மாவோயிசத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்குகின்றார்கள். இது சமுதாயத்தின் குறையா? இல்லை நமது அரசியல் அமைப்புகளின் குறையா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வரும்.
பொது வாழ்விலிருந்து போலிகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். இயற்கையின் அருட்கொடை அதற்கான வாய்ப்பை வழங்கினால் தான் ஆரோக்கிய அரசியல் சமுதாயமும் , பொதுவாழ்வும் உருவாகும்.
பொதுவாழ்வுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்தான் ராம் மனோகர் லோகியா. அவரது பிறந்ததினத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது வரவேற்கத்தக்கது.
Finally,A Documentary on Lohia.
It took more than 47 years after his death to make the first film, a documentary . on the life and times of Ram manohar lohia, arguably the architect of India's anti-Congress, and the larger, Opposition politics.
Its first Screening took place before a select audience on Lohia's 105th Birth anniversary on Thursday. The attempt to put Lohia and his "ism" into a short film was not an initiative of any top-rung leaders of the samajwadi stream of politics.
The Documentary 'Lohia-Champion of the downtrodden', was produced by Vichar Nyas headed by DP Tiripathi, a Rajya Sabha member of NCP. it was directed by Yashwant Giri, a young director from Mumbai film world and nephew of Nepal-based Socialist Pradeep Giri. The paucity of funds took it over two years to complete the film.
25-03-2015.
#Ram_manohar_lohia
#A_Documentary_on_Lohia.
#KSR_Posts
No comments:
Post a Comment