புனித தாமஸ் மயிலை , கிண்டி- பரங்கிமலைப் பகுதியில் கிறிஸ்துவ மார்க்கப்பணிகளை ஆற்றி சில நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்தார் . அந்த புனிதரின் பூதவுடலின் அங்கங்களின் சில துகள்களை சென்னைக்கு எடுத்துவந்து இன்றோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன (09-03-1965 -2015 )
பரங்கிமலையில் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தாமஸ் மறைசாட்சியாக வாழ்ந்தார். இவர், இந்தியாவுக்கு
முதன் முதலில் கிறிஸ்து மார்க்கத்தைக் கொண்டுவந்தவர்.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர், இந்தியாவின் Gondophare அரசரின் வணிகர் Habban என்பவருடன் புனிதர் தாமஸுக்குக் தொடர்பு ஏற்பட்டது.
Habban-ன் கப்பலில் கி.பி.52ம் ஆண்டில் தற்போதைய கேரளாவின் மலபார் கடற்கரையில், கிரங்கனூரில்(Cranganore)வந்திறங்கினார். இக்கடற்கரைப் பகுதியில் பல ஆலயங்களைக் கட்டிய பின்னர், இந்தியாவின் கோரமண்டல் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கும், பின்னர் தெற்குப் பகுதிக்கும் வந்தார் அப்புனிதர்.
அங்கு நற்செய்தி அறிவித்தபோது, எதிரிகளுக்குப் பயந்து முதலில் லிட்டில் மவுண்ட் சென்றார். பின்னர் தற்போதைய தோமையார் மலையாகிய பரங்கிமலை சென்றார். அம்மலையில் அவர் செபத்தில் ஆழ்ந்திருந்தபோது கி.பி.72ம் ஆண்டில் பகைவர்களால் கொலைசெய்யப்பட்டார். புனித தோமையார் உயிரிழந்த இடத்திலுள்ள ஆலயத்தில் அவர் வழிபட்ட சிலுவை இன்றும் வைத்து போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவர் மறைவுக்குப் பின், ஈராக் நாட்டில் மொசுல் மற்றும் சிரியாவில் உள்ள இடேசியாவுக்கும் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக சிலர் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அதுபற்றிய ஆதாரங்கள் நமக்குகிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. சரியாக 50ஆண்டுகளுக்கு முன் புனிதர் தாமஸ் அவருடைய அடையாளங்கள் சென்னைக்கு வந்தபோது சாந்தோம் தேவாலயம், பரங்கி மலைப்பகுதியில் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.
Photo : Mylapor Cross and Old Santhome Church / St thomas Mount./Mousil City, Eraq.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment