இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில ஏட்டில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து துறைமுகங்கள் வளர்ச்சியைப் பற்றி இந்திய வரைபடத்தில் குறிப்பிட்டு விளக்கமான செய்தி வந்துள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் அன்றைய புகைவண்டிகளுக்கு இருப்புப் பாதை அமைத்தது போல, நீர்வழிப்பாதை அமைக்கவேண்டும் என்று அப்போதே திட்டங்கள் இருந்தன. அன்றைக்கு வேடிக்கையாக இதனை இரும்பு வெர்சஸ் தண்ணீர் என்று சொல்லி எந்தப்பாதை வெற்றிகரமாக அமையுமென்று ஆங்க்லிலேயப் பரிவாரங்களிடையே பேசப்பட்டது.
கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை நீர் வழிப்போக்குவரத்தால் எப்படி இணைப்பது என்று இந்த வரைபடம் அனைத்து விபரங்களோடு நமக்கு விளக்குகின்றது. இது ஒரு அற்புதமான திட்டம். இதிலும் சுற்றுச் சூழல் இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். முடிந்த அளவு சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொண்டு இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டும்.
தற்போது கேரளாவிலும், மேற்குவங்கம், பீகார், பிரம்மபுத்திரா பாயும் அசாம், அருணாச்சலப் பிரதேசப்பகுதிகளில் நீர்வழிப்போக்குவரத்து மிகவும் பயன்பாட்டில் இருக்கின்றது. தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் மரக்காணத்தில் துவங்கி சென்னைக்கு வந்து ஆந்திரம் மசூலிப்பட்டிணம் வழியாக கஞ்சம் மாவட்டம் வழியாக ஒடிசா எல்லைவரைத் தொடும் பக்கிங்ஹாம் திட்டம் முக்கியமான திட்டமாகும்.
நீர்வழிப்போக்குவரத்து குறித்தும், பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் குறித்தும் என்னுடைய இணையதளத்தில் விரிவான பதிவுகள் முன்பே எழுதி இருக்கிறேன்.
இத்திட்டம் கனவுத்திட்டமா செயல்த்திட்டமா என்று காலம் தான் முடிவு செய்யவேண்டும்.
-கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#Waterways
#Shipping
#Ports
#KSR_Posts
No comments:
Post a Comment