திட்டமிட்டவாறு ”கதை சொல்லி” -யின் பணிகள் நடக்கின்றன...
அட்டைப்படம் மாட்டுவண்டியோடு இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கி.ராவுக்கு சந்தோஷம். கழனியூரன் உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட பொறுப்புகளை எடுத்துச் செய்தார்.
கோவில்பட்டி மாரீஸின் உழைப்பு அதிகம். படைப்பாளிகளின் படைப்புகள் பல வந்துள்ளன. யாவும் பரிசீலனையில் உள்ளன. முடிந்தவரை நாட்டுப்புற, வட்டார வழக்கு படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இந்த கதைசொல்லி இதழை நாங்கள் இருக்கின்றோம் என்று பொறுப்புகளைத் தலையில் ஏற்றிக்கொண்ட இளைஞர்களான, கார்த்திக் புகழேந்தி (திருநெல்வேலி) , கனவுப்பிரியன் (தூத்துக்குடி), சிவகாசி சுரேஷ், பேராசிரியர் விஜய ராஜேஸ்வரி (திருவனந்த புரம்), ஸ்ரீதேவி செல்வராஜன் (விருதுநகர்), காயத்ரிதேவி (நாகர்கோவில்), இராதா இராமச்சந்திரன் (புதுக்கோட்டை) பாராட்டக்கூடிய வகையில் தயாரித்து வருகின்றனர்.
ஏப்ரல் 1ம் தேதி “கதைசொல்லி” கத்தாயஇதழ் வெளிவருகின்றது. இதழ் வருவதை கேட்டு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், மாமா தோப்பில் முகம்மது மீரான், தீப நடராஜன், நண்பர்கள் மணா, அப்பணசாமி, பேராசிரியர் பஞ்சாங்கம், பேராசிரியர் அ.ராமசாமி, கவிஞர் வெண்ணிலா, உதயசங்கர், கோவை ரவீந்திரன், கல்கி பிரியன் இதுகுறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-3-2015.
#KSR_Posts.
#Kathai_solli.
No comments:
Post a Comment