Thursday, March 12, 2015

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்..



"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது..
கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது..  அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில்  இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம்
இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.. ”


அற்புதமான வரிகள்.  கவியரசர் கண்ணதாசனே பாடுவதுபோல காட்சியமைக்கப்பட்ட சூரியகாந்தி திரைப்படத்தின் பாடல்.  டெல்லி விமான நிலையத்தில் சென்னை விமானத்துக்காக காத்திருந்த போது இந்த பாடல் நினைவுக்கு  வந்தது.

கூடவே,  நண்பர்களும் நம்மால் உயர்வு பெற்றவர்களும், அவர்களுடைய இல்லத்தில் உலை கொதிப்பதற்கு காரணமாக பல உதவிகளைப் பெற்றவர்கள் எல்லாம் இந்தப்பாடலைப் கேட்கும் போது நினைவுக்கு வருகின்றார்கள்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...