SRI LANKA THE NEW COUNTRY -என்ற ஆங்கில நூலினை பத்மா ராவ் சுந்தர்ஜி எழுதி, Harper Colins பதிப்பகம் இன்றைக்கு (31-03-2015) டெல்லியில் வெளியிட்டுள்ளது. இந்நூலானது திட்டமிட்டு உண்மைகளை மறைக்க எழுதப்பட்டதுபோல தெரிகின்றது.
2009 முள்ளிவாய்காலில் நடந்த கொடுமைகள், ரணங்கள் எல்லாம்
கண்ணீர்த்திரை சாட்சியாக இருக்கும் பொழுது, அவற்றை எல்லாம்
மறைக்கும் வகையில், இலங்கை இப்போது ஏதோ புதிய நாடு போலவும், அங்கு தமிழர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது போலவும் எழுதிவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகள் விஷவிதையாக இந்நூலில் எழுத்துகளாக உள்ளன.
எழுதுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், உண்மையும் எதார்த்தமும் எழுத்தில் புலப்படவேண்டும். அதுதான் நாளைய வரலாறு.
இந்த நூலின் 125ம் பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பத்தியைப் படித்தாலே, நமக்கு உண்மை இல்லை என்பதும், நம்மை மேலும் வேதனைப்படுத்துகின்ற செய்தியாகவும் அமைகின்றது.
ஈழ ஆதரவாளர்களுக்கும், தமிழர்களும் பொய்யெது உண்மை எது என்று தெரியும். இதோ அந்த 125ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள செய்தி :
"One of your famous, pro-LTTE Tamil Nadu politicians assured Prabhakaran that a ship from the United States would arrive and stand by Tamil Nadu, so to keep fighting till the very end. Prabhakaran was urged to take innocent people as cover, head towards Mullaithivu and make escape by sea to Tamil Nadu. That is why there were so many casualties in the last phase of the war in Mullaithivu-because the LTTE brass shamelessly used thousands of poor, suffering people as human shields." - Page125.
எவ்வளவு ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்!?.
“ தமிழகத்திலிருந்து புலிகளுக்கு ஆதரவான பிரபல தலைவர், “பிரபாகரனுக்கு அமெரிக்காவிலிருந்து கப்பல் வருகிறது கவலைப்படவேண்டாம் நீங்கள் போரை நிறுத்திவிடாதீர்கள்” என்று சொன்னதாகவும், அதனால் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சற்றும் மானமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏழ்மையில் வாடும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தினார் என்றும், கடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துவிடலாம் என்றும் சொல்லப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய புரட்டு. மானமில்லாத ஜென்மங்கள்.”
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-03-2015.
No comments:
Post a Comment