ஈழ மனித உரிமைகள் ஆர்வலர் சகோதரி.ஜெயக்குமாரி 2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது தன்னுடைய 15வயது மகன் மகேந்திரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்ததாகவும், இராணுவத்திடம் யுத்த இறுதிகாலத்தில் சரணடைந்ததாகவும், அவரது மகன் மகேந்திரனை மீட்க்வேண்டி இராணுவத்துடன் போராடினார்.
கடந்த 2014ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். ஏகெற்கனவே தனது கணவர் பாலேந்திரனை இழந்து இவருடைய மூத்த மகனும் உயிரிழந்தார். இப்படியான துயரம் மிகுந்த வாழ்விலும், ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக போராடிய பெண்மணியை இராஜபக்ஷே அரசு கைது செய்து சிறையிலடைத்தது.
இப்போது ஜெயக்குமாரி அம்மையார் விடுதலைசெய்யப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளது. தமிழர்கள் அனைவருக்கும் ஓரளவு ஆறுதலைத் தருகின்றது.
No comments:
Post a Comment