ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 09-03-1965 அன்று லால்பகதூர் சாஸ்த்திரி பிரதமராக இருந்தபொழுது, தென்னிந்திய நகரங்களில் குறிப்பாக சென்னையில் நாடாளுமன்ற கூட்டத்தை அவ்வப்போது நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அந்த கோரிக்கையை எழுப்பியது எந்த அமைப்பு என்று பார்த்தால், இந்தியதேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய செயற்குழு. இச்செய்தியை அறிந்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் அன்றைய நிர்வாகிகள் எச்.சி.மாத்தூர், பகவத் ஜா ஆசாத், சுரேஷ் தேசாய், ஆர்.எஸ்.பாண்டே ,ரகுநாத் சிங் போன்ற காங்கிரஸ் நாடாளுமன்றஉறுப்பினர்கள், பிரதமர் சாஸ்த்திரியிடம், டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடப்பது போன்று தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் முகாமிட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுற்றுக்கூட்டங்கள் போல நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர்.
ஆனால், பிரதமர் சாஸ்த்திரி இதுகுறித்தான சிரமங்களையும் ஆய்ந்து அதன்பின் முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று உறுதி அளித்தார். இன்றைக்கும் இச்செய்தி விவாதத்திற்குட்பட்ட பிரச்சனை என்பது மனதில் படுகிறது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment