அருவருப்பான ஆபாச அரசியல் அரங்கம் இன்றைய தமிழ்நாடு.
நாடகம் என்றால் அதனை ரசித்து பார்க்கலாம். சிந்தனையை தூண்டும் காட்சிகள் இருக்கும். அவ்வப்போது வரும் நகைச்சுவைகளை காட்சிகளை நம்மை மறந்து, சிரித்து மகிழலாம். ஆனால் இன்று நடக்கும் ஜீரணிக்கவே முடியாத அருவருப்பான நடவடிக்கைகளை எப்படி ரசிக்க முடியும். முகத்தை திருப்பிக் கொண்டு போவதே சரியான வழி. ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் நிலைக் கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை. அத்தனை அநாகரீகமும் அத்துமீறி அல்லவா நடக்கின்றது. மக்களும் கொந்தளிப்பதாக இல்லை. அமைதியாக பொறுமிக் கொண்டு இருக்கின்றனர். வாக்களிக்க ₹250ம் ₹500ம் பெற்றுக் கொண்டதால் ஆர்ப்பரிக்கும் அருகதை இழந்து நிற்கின்றார்கள்.
அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழகம் இந்திய அரசியலில் பல்வேறு திட்டங்களின், போராட்டங்களின் , சாதனைகளின் . மக்கள் நலனில் அக்கறை இல்லாத பிண்டங்களையும், முண்டங்களையும் தேர்வு செய்து கூவாத்தூரில் கூடி கூத்துக்கட்டியவர்களையும் வரலாறு சுமக்க வேண்டியுள்ளது வேதனையான விசயம்.
#அரசியல்அபாசம்
#கூவாத்தூர்அரசியல்கல்லூரிமாணவர்கள்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-08-2017
No comments:
Post a Comment