தோல்விகளும் பின்னடைவுகளும் சறுக்கல்களும் இல்லாத வாழ்வே கிடையாது. தோல்விகளில்
துவளாமல் இருக்கம், பின்னடைவுகளில் பின்தங்காமல் இருக்கவும், சறுக்கல்களில் சுணங்கிப்
போகாமல் இருக்கவும் இந்தத் தளரா நம்பிக்கை மிகவும் அவசியம். இந்த நம்பிக்கையானது பிரச்ச்சினைகளை
நேருக்கு நேர் சந்தித்து அதைத் தீர்க்கும் தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. அது
மட்டுமின்றி இந்த நம்பிக்கையானது பின்னடைவுகளில் உள்ள நல்லவற்றை மட்டும் பார்க்கும்
திறனையும் நமக்கு அளிக்கிறது.
பொதுவாகவே நாம் சோர்ந்திருக்கும் பொழுதினில், பல தரப்பட்ட அறிவுரைகள் வாரி வழங்கப்படும்.
அது இன்னும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி வேதனையடையச் செய்யும். ஆனால் தளரா நம்பிக்கை
கொண்டிருந்தால், தோல்விகளில் இருந்து மீள்வதற்கு பிறரின் தோள்கள் தேவையில்லை.
நம்முடைய
வேதனைகள் காட்சிப் பொருளாகத் தான் பிறருக்கு அமையும். நமக்குள்ளே உள்ளடக்கி இந்த பிரச்சனைகளை
தீர்த்துக் கொள்வது நமக்கே நல்லதாகும்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே
எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-08-2017
No comments:
Post a Comment