Thursday, August 31, 2017

பெண்ணாறு - பாலாறு இணைப்பு - II

நேற்றுக்கு முன்னாளில் பெண்ணாறு - பாலாறு இணைப்பு குறித்து எழுதிய எனது பதிவை படித்து விட்டு வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட நண்பர்கள் அனுப்பிய பின்னூட்டப் பதிவுகள் வருமாறு.
1. 73 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள "தென்பெண்ணை - பாலாறு" இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி, அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல, வட்டாச்சி்யரிடம் மனு அளிக்க, பேரணி மற்றும் பொதுக்கூட்டம். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று மாலை நாட்டறம்பள்ளி உழவர் சந்தை முன்பு நடைப்பெற்றது.
தருமபுரி மற்றும் வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை அறிந்த ஆங்கிலேய அரசு 1943 ஆம் ஆண்டில் தென்பெண்ணை-பாலாறு திட்டத்தை தீட்டி அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு தேசிய நீர் மேம்பாட்டு முகமை (National Water Development Agency - NWDA) அறிவுறுத்தலின் பேரில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வழி இணைப்பு பாதைக்கான இடத்தை ஆய்வு செய்தனர். நெடுங்கல் அணைக்கட்டில் தொடங்கி நாகரசம்பட்டி, சந்தூர், கன்னடஹள்ளி, கொடியூர், கந்திலி மேற்கு, புதுப்பேட்டை, B பந்தாரப்பள்ளி வழியாக கொட்டாறு (அ) கல்லாற்றில் இணைக்கும் வழித்தடத்தை இறுதி செய்தனர். (பார்க்க ஒளிப்படம்)
அதிக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக இதனை விவசாயிகள் எதிர்த்தனர். அதற்கு பதிலாக நெடுங்கல் அணைக்கட்டில் தொடங்கி பேரிகை, சூளகிரி, வேப்பணப்பள்ளி, மேடுகாம்பள்ளி, வரமணகுண்டா, கனமூர், செட்டேரி டேம், பச்சூர் ஆற்றில் இணைத்து அங்கிருந்து சொரக்காயல்நத்தம், நாயனசெருவு, மல்லகுண்டா வழியாக பாலாற்றில் இணைக்க விவசாயிகள் கோரிக்கை வைப்பதோடு போராடியும் வருகின்றனர்.
அந்த வகையில் விவசாயிகள் பேரணியாக வட்டாச்சியரிடம் சென்று தென்பெண்ணை- பாலாறு இணைக்க வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை மனு அளித்தனர்.



National Water Development Agency (NWDA) under Ministry of Water Resources has received 36 proposals of intra-state links from 7 States viz. Maharashtra, Gujarat, Jharkhand, Orissa, Bihar, Rajasthan and Tamil Nadu so far. Out of above, Pre-Feasibility Reports (PFRs) of 12 intra-state links have been completed by NWDA. Details of intra-state link proposals received from the State Governments along with the names of respective rivers to be interlinked and status of studies is given below :-
DPRs (Detail Project Report) of Ponnaiyar –Palar link (Tamil Nadu), Wainganga (Gosikhurd)-Nalganga (Purna Tapi) link (Maharashtra), Barakar-Damodar-Subarnarekha and Vamsadhara-Rushikulya (Nandaninalla) are under progress. Out of these, DPR of Ponnaiyar-Palar link is various stages of completion.
Activists back Ponnaiyar-Palar link project to augment water supply
Linking Ponnaiyar-Palar rivers remains only on government website
....
2.இது நிறைவேற்றப்பட்டால் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் மற்றும் வேலூர் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சனையாவது சமாளிக்க பயன்படும்...
....
3.மமுதலில் உள்ளதுதான் நெடுங்கல் (தென்பெண்ணை) - கல்லாறு (பாலாறு) இணைப்பு திட்டம்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...