Wednesday, August 30, 2017

மியான்மர் பிரச்சனை.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடூமாக படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணமான பவுத்தக் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவம் உறுதுணையாய்இருக்கிறது. 2017 ஆகஸ்டு 25 அன்று அர்சா என்ற ரோஹிங்கியா முஸ்லிம் கிளர்ச்சிக் குழு, மியான்மர் இராணுவ முகாம் ஒன்றையும் 24 காவல் நிலையங்களையும் தாக்கியுள்ளது. இதில் காவல் துறையைச் சேர்ந்த 11 பேரும் போராளிகள் 21 பேரும் கொல்லப்பட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து,பவுத்தக்கிளர்ச்சி யாளர்களும் இராணுவமும் பதில் நடவடிக்கையாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளன. இதில் ஏராளமானோர் பலியாகியுள்ளனார்.18 ஆயிரத்திற்கும் அதிகமானோர், வங்காளதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, உதவ வேண்டும். பிணக்குகளைத் தீர்க்க, அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு அமைக்க வேண்டும். ஆங் சான் சுகி, பவுத்தர்களுக்குஆதரவாகஉள்ளதாகக்கருதப்படுவதால்,உலகநடுநிலையாளர்கள் தலைமையில்இந்தப்பேச்சுநடக்கவேண்டும்.ஐ.நா.,பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். மேலும், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பன்னாட்டுப் பிரதிநிதிகளைஉள்ளடக்கியசுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பினை மியான்மர் அரசு வழங்காவிட்டால், ஐ.நா. அமைதிப் படையை அனுப்பவேண்டும். மறுவாழ்வு பணிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும்.
இப்படியாக உலக அளவில் மனித இன பேரழிவை சந்திக்கும் நாடுகள்.
ஸ்பெயின்
போஸ்னியா
ஏமன்
எத்தியோப்பியா
சூடான்
எகிப்து
அல்ஜீரியா
தஜகிஸ்தான்
சிரியா
நைஜிரியா
எரிட்ரியா
துருக்கி
சோமாலியா
செசன்யா
ஈழம்
ஈராக்
ஈரான்
ஆப்கானிஸ்தான்
பாலஸ்தீன்
பர்மா
லிபியா
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-08-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...