இது அவநம்பிக்கை இல்லை. நான் அறிந்ததும், எனக்கு புரிந்ததும்.
1) புதிய பொருளாதாரக் கொள்கை 1992ல் அமுல்படுத்தப்பட்ட பின்பு நாம் எவ்வளவு நினைத்தாலும் நம்முடைய பட்ஜெட்டை நமக்குள் வகுத்துக் கொள்ள முடியாது. உலக வங்கி,IMF சர்வதேச நாணயநிதியம் எனப்படும் அமைப்பின்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடல் தாண்டிய சக்திகள், கார்ப்போரேட்டுகளும் தான் நிர்ணயிக்கின்றன. நம் இறையாண்மை கேள்வி குறி ஆகி விட்டது.
இனி ரேசன் கடைகள் படிப்படியாக குறைந்து, ரேசன் கடைகள் இல்லாமல் போகும்.
குடிதண்ணீர் கூட விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும்.
தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறையும். அரசுப்பணிகள் புதிதாக ஏற்படுத்தப்பட மாட்டாது. அரசு வேலை கிடைப்பது மிகக் கடினமாகும்.
2) பொதுவாழ்விலும் அரசியலிலும் நேர்மையாக பணியாற்றும் ஆற்றல் உடையவர்களிடம் உழைப்பை, ஆக்கபூர்வமான பணிகளை பெற்றுக் கொண்டு அவர்களை ஒதுக்கிவிட்டு ஒன்றும் அறியாத மூடர்களை மக்கள் முன் நிறுத்தி அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நிறுத்தப்பட்டு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. வணிக பேர அரசியசில் வாக்குகள் காசுக்கு விற்பது.
இப்படிப் பட்டவர்களே ஊழலின் பிறப்பிடமாக இருக்கின்றனர்.
3) மக்கள் போராட்டாங்கள் என்பவை உணர்வோடு கலந்த ஒன்றாக இருக்க வேண்டும் மாறாக கண்துடைப்பு சுயநல போராட்டங்களாக கூடி கலைந்திடும் கூட்டமாக இருக்க கூடாது. ஊடக வெளிச்சத்தில் முகம் காண்பித்து கலைவதால் என்ன இலாபம் இருக்க முடியும் அல்லது எந்த இலட்சியத்தை அடைய முடியும்?
4) மதச்சார்பின்மை என்பதே தவறு. மதநல்லிணக்கம் என்பதே சரி. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் அவரவர் சார்ந்த மதத்தை நம்பி இருக்கும் பட்சத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தைக் கூட தவறான கையாளுதல் என கருதுகிறேன். அவரவர்கள் மீதான நம்பிக்கையை தன்னகத்தே வைத்துக் கொண்டு அடுத்தவர்களை புரிந்து , மரியாதை அளிப்பது மதநல்லிணக்கம். இதுவே அமைதிக்கு வழி செய்யும். மத
நல்லிணக்கம் தழைக்க வேண்டுமாயின் எவ்வித தடையும் இன்றி
1)திருக்கோயில்களில் பதிகங்கள் ,
பாசுரங்கள் பாடி ஆறுகால பூசைகள் நடக்க வேண்டும்.
2)தடையின்றி தேவாலயங்களில் மணியோசை உடன் ஜெபங்கள் நடக்க வேண்டும்.
3)மசூதிகளில் பாங்கு ஒலித்து தொழுகைகள் நடக்க வேண்டும்.
4)குருத்துவாரக்களில் பிரபந்தங்களின்
மறைமொழி கேட்கட்டும்.
5)பகுத்தறிவு இயக்கங்களின் இறை மறுப்பு பிரச்சாரங்கள் சதுக்கங்களில் தடையின்றி நடக்கட்டும்
இவைற்றை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் நடவடிக்கைக்கு குறுக்கே பிறர் நிற்காமல் இருக்க வேண்டும்.
இனி நாம் எதையும் மாற்ற இயலாது. உலகமயமாக்கல் என்பது நம்மை அறியாமல் நாம் பூட்டிக் கொண்ட பூட்டு. இதுவே எதார்த்த உலகின் போக்கு. இதனை அறிந்து புரிந்துக்கொண்டு போவதே சரி
#மக்கள்போராட்டாங்கள்
#உலகமயமாக்கல்
#மதநல்லிணக்கம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-08-2017
No comments:
Post a Comment