Monday, August 28, 2017

விவாசாயிகன் பரிதாப நிலை

நெல்மணியை விளைத்து அது முதிர்ந்து தலைசாய்ந்து நிற்கும் போது நெஞ்சுயர்த்தி, தனக்கு தானே தலைப்பாகை பட்டம் சூட்டிக் கொண்டு கம்பீரமாக களம் கண்ட விவசாயி இன்று வேப்பம் கொட்டைகளை பொறுக்கி விற்று தன் வயிற்றை நிரப்பு வாழ்வு நடத்துகின்ற நிலை. இதை விட இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? 

கரும்பு கசக்கின்றது. ஆமாங்க! கரும்பு கிடைக்கும் விலையை விட கருவேல மர விறகு விலை அதிகமாகம். இவையாவும் நேற்று நானே கிராமத்தில் மக்கள் பேச காதால் கேட்டதும் , கண்ணால் கண்டதும்.

வேப்பம் தரும் வயிற்றுப்பிழைப்பு விவசாயிகள் வாழ்வு கசக்கின்றது என்பதை தானே காட்டுகின்றது. கசக்கின்ற வாழ்வு எப்படி இனிக்கும் என்ற கவலையுடன் அங்கிருந்து இடம்பெயர்ந்தேன்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...