Thursday, October 19, 2023

ஓர் ஆணாக நீ தோற்றுப்போவதிலோ அவமானப்படுவதிலோ கண் கலங்குவதிலோ குறையொன்றுமில்லை… இங்கு தகுதியே தடை. அது உன் பிழை இல்லை. இங்குள்ள பிழைப்பு வாதிகளின் வினை…

தோற்றுப்போவதை 
மறுதலிக்கப்படுவதை
கண்ணீர் சிந்துவதை 
சகித்துக்கொள்வதனை 
கோழைத்தனமென 
அது உன்னை நம்பச்செய்திடும் 

ஆணென்றால் 
இப்படித்தானெனும் 
போலி பெருமைகளை 
அது உன் தலையில் ஏற்றி வைத்திடும்

உண்மையில்
ஓர் ஆணாக நீ
தோற்றுப்போவதிலோ 
அவமானப்படுவதிலோ 
கண் கலங்குவதிலோ
குறையொன்றுமில்லை…
இங்கு தகுதியே தடை.
அது உன் பிழை இல்லை.
இங்குள்ள பிழைப்பு வாதிகளின் வினை…

 தோற்றுப்போ
வெற்றியின் சூத்திரங்களை 
அது உனக்கு காண்பித்துத்தரும்

அவமானப்படு 
வாழ்வென்பது இதுதானனென
அது உன்னை வழி நடத்தும்

பின்னும்
கண்ணீரை பலவீனமெனக் கருதி
உள்ளுக்குள் நீ உடைந்து போய்விடாதே

வலிக்க வலிக்க 
இந்த வாழ்க்கையை 
ருசித்து வாழ நீ கற்றிடு
போதும் 

வாழ்தலொன்றும் 
அத்தனை கடினமில்லை…

-ரிஸ்கா முக்தார்
(எங்கோ பெனாரஸ் என்ற வாரணாசி கங்கை கரையில் படித்தது….)


No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...