Saturday, October 21, 2023

தாழ்ந்து வரும் தமிழகமே… தன்மை இழவேல்; தாழ்ந்து நடவேல்; -பாரதி

தாழ்ந்து வரும் தமிழகமே…
தன்மை இழவேல்; தாழ்ந்து நடவேல்; -பாரதி




*நமக்கு  தில்லானா மோகனாம்பாள் வைத்திகள், சப்பானிகள், சகுனிகள், காந்தாரிகள், கூனிகள், சவலைகள்,William Shakespeare’s Shylock ' தேவையில்லை*. #*தகுதியே தடை*
—————————————
அரசியலில் அற்றம் காக்கும் கருவிகளாய்ச் சிலர்  மட்டும் இருந்தால் போதுமானது. அரசியலில் அற்றம் காக்கும் கருவிகளாய்ச் சிலர்  மட்டும் இருந்தால் போதுமானது.
நான் அறிந்த வரை  தமிழக அரசியல் தளத்தில் , கடந்த 45 ஆண்டுகளில்,1975க்கு பிறகு  காங்கிரஸில் 
ப. சிதம்பரம் திராவிட இயக்கத்தில் வைகோ, அன்றைய ஜனசங்கம்   இன்றைய பாரதிய ஜனதா கட்சியைச்சார்ந்த மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி  ஜனதாவில், மறைந்த இரா செழியன் மற்றும் பழ நெடுமாறன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மறைந்த  ப.மாணிக்கம்  மற்றும் சி.மகேந்திரன்(சிபிஐ),  மறைந்த எ. நல்லசிவன் (சிபிஎம்) மற்றும் தமிழருவிமணியன்  போன்ற பல ஆளுமைகளை எல்லாம் பயன்படுத்தாமல் இந்த தமிழமண் தவறவிட்டது ஒரு பெரிய அரசியல் இழப்பு என்றே சொல்வேன்.இவர்கள் பின் நின்றவர்களும் ஆற்றல் மிக்கவர்கள்.  இவர்களும் சாதாரண சராசரி நபர்கள் அல்ல; திடமிக்க ஆளுமைகள். தகுதியே தடை என
இங்கு ஆகி விட்டது.

கடந்த அரசியல் வரலாற்றில் இவர்களெல்லாம் மிக நெருக்கடியான காலத்தில் என்ன விதமான நிலைப்பாடு எடுத்தார்கள் என்ன எழுதினார்கள் பேசினார்கள் என்பதை திரும்பவும் ஒரு முறை வாசித்துயோசித்து பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் அவர்களின் அருமை புரியும்.

என்ன செய்வது உதிர்ந்த சருகுகளின் இரைச்சலில் இந்த பெருமரங்ககள் அமைதி அடைந்துவிட்டன . உண்மையைச் சொன்னால் இவர்கள் மெல்ல மெல்ல அவர்களின் நியாய, நெறி, அறம் சார்ந்த அரசியல் சரித்தன்மைக்காக ஓரங்கட்டப்பட்டார்கள்!

மற்றபடி இவர்கள் அனைவரும் திறமைசாலிகள் என்பதில் வேறு எவருக்கும் மறுப்பு இருக்க முடியாது. அரசியல் சுயலாபத்திற்காக இன்று கூத்தடிக்கும் பல நபர்களை கும்பல்களை அவர்களின் நரித்தனத்தை எல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. கிஞ்சித்தும் மனச்சான்று அற்ற ஒரு கூட்டம் அரசியலில் பெருகி நிறைந்து வருகிறது. இன்றைய அரசியல் வியாபாரம் என் போக்கில், போங்கடா போக்கத்த பசங்களா.. என சொல்லத்தான் முடியும்.

நமக்கு  தில்லானா மோகனாம்பாள் வைத்திகள், சப்பானிகள், சகுனிகள், காந்தாரிகள், கூனிகள், William Shakespeare’s Shylock ' குறுக்கு வழியில்  கொடும் குடும்ப ஆதிக்கத்தில் வந்த அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள்,குடிலன்கள் தேவையில்லை. அரசியலில் அற்றம் காக்கும் கருவிகளாய்ச் சிலர்  மட்டும் இருந்தால் போதுமானது.

கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்ற பாரதி மகா ஞானி..

   "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்"-குறள்.

அலைக்கரங்கள் அமைதிகாத்தால்
       நடுக்கடலே கூடாரம்!
அலைக்கரங்கள் நீட்சிகொண்டால்
       வாழ்க்கையே திசைமாறும்!

தாழ்ந்து வரும் தமிழகமே…
தன்மை இழவேல்; தாழ்ந்து நடவேல்; -பாரதி

#தாழ்ந்து_வரும்_தமிழகமே…
#தன்மைஇழவேல்_தாழ்ந்துநடவேல்; 
#தமிழகஅரசியல் #Taminadu_poltics
#வைத்திகள்சப்பானிகள்சகுனிகள்காந்தாரிகள்கூனிகள்சவலைகள்WilliamShakespeare_Shylockதேவையில்லை.
#தகுதியே_தடை

K.S. Radhakrishnan
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-10-2023.

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...