#*எதோகெட்ட வார்த்தைகள் நடிகர்விஜய் லியோ படத்தில் முதன்முதலாக பிரயோகிக்கப்பட்டது என சத்தங்கள்*…..
*சினிமா சென்சார் போர்டு உறுப்பினராக இருந்தவன் என்ற நிலையில் எனது பதிவு*.
—————————————
நடிகர் விஜய் நடிக்கும் லியோ (LeoTrailer )படத்தில் ஏதோ கெட்ட வார்த்தை பிரயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பலரும் அவரவர் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதோ கெட்ட வார்த்தைகள் அந்த படத்தில் தான் முதன் முதலாக பிரயோகிக்கப்பட்டது என்பது மாதிரி பேசுவதெல்லாம் அபத்தம். இந்த நிலை பல திரைப்படங்களில் வந்ததுண்டு .நானே சினிமா சென்சார் போர்டு உறுப்பினராக 1980களில்-95வரை இருந்தவன்.பார்த்தவன். அவற்றை விரிவாக சொன்னால் அதுவே இங்கு நீண்ட பதிவு ஆகி விடும்
இன்றைக்கு கட்சி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய பதவியிலும் உள்ளவர்கள் பலர் எல்லாம் கடந்த காலத்தில் பொது மேடைகளில் எவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகளை ஆபாசமான முறையில் ஒருவரையொருவர் விமர்சிக்கிறேன் பேர் வழி என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது திட்டியது எல்லாம் புனித வார்த்தைகளா? அவர்கள் எல்லாம் எவ்வளவு கெட்ட வார்த்தைகளை எங்கே எப்போது பயன்படுத்தினார்கள் என்பதற்கு ஒரு அகராதியே தயாரிக்கலாம். அவர்கள் பிற்காலத்தில் ‘மந்திரி’ அளவுக்கு வந்ததும் உண்டு. ஒரு உதாரணம் - கடந்த காலத்தில்
வண்ணை ஸ்டெல்லா என்ற பெண் பேச்சாளர் அரசியல் மேடையில் 1970-80களில வரை பேசியது பேச்சுகள் அல்ல அவை கெட்ட வார்த்தைகளில் உதிர்த்த பஜாரி பாஷைகளின் தொகுப்பே ஆகும். இப்படி பலர் நேற்றும் உண்டு, இன்றும் உண்டு.
இன்றைய சமூக ஊடகங்கள்லும் பலரும் மிகவும் கீழ்த்தரமான ஆபாச சொற்களில் கண்ணியமற்று பேசுகிறார்கள். அதற்க்குதான் likes ஆயிரம் லட்சக் கணக்கில் விருப்புகளும் வருகின்றன. இதுதான் இங்குள்ள உண்மையான நிலை. Artificial society.. what to do..
இப்படியான லட்சணத்தில் ஒரு திரைப்படத்தில் வருகிற ஒரு கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி நாட்டில் ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டது
"இருக்கிற பிரச்சினை இருக்கட்டும் கிழவியை தூக்கி நடுவீட்ல வய்யி"என்பது மாதிரி இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-10-2023.
No comments:
Post a Comment