Saturday, October 14, 2023

#முதல்வர்_ஸ்டாலின்அவர்களின்_கவனத்திற்கு, "ஈழத் தமிழரும் கலைஞரும்" இந்த புத்தகம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? #டெசோவெளியிடு-1

#முதல்வர்_ஸ்டாலின்அவர்களின்_கவனத்திற்கு,


"ஈழத் தமிழரும் கலைஞரும்"

இந்த புத்தகம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? #டெசோவெளியிடு-1

முள்ளிவாய்க்கால் ரணமான சம்பவங்கள் முடிந்த பிறகு 2012 இல் டெசோமாநாடு நடக்கிற வேலையில் திமுகவிற்கு முட்டுக் கொடுத்து என்னைக் கலைஞர் அவர்கள் இந்த புத்தகத்தை (225 பக்கங்கள் -இலவச 
ம்)எழுத பணித்தார்.  இப்படியான எனது தமிழ், ஆங்கிலம் என நான்கு புத்தகங்களை கலைஞர் சொல்லி அவரின் அணுந்துரைகள் சிறப்பாக எழுதி வந்தது.அது உங்களது நூல் அலமாரியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். சம்பந்தமற்று திமுக கலைஞர் மீது கண்டனமான எதிர்வினைகளை அன்று ஆற்றி யார் யாருக்கோ என்னென்ன பதவி எல்லாம் கொடுத்து மகிழும் நீங்கள் இந்த புத்தகத்தை ஒரு முறை எடுத்து வாசியுங்கள் .காலத்தினால் செய்த நன்றி ஞாலத்திலும் மாணப் பெரிது! உங்கள் இந்த



கொற்றம் வாழியவே….

தேவையான கேள்விகளுக்கு விளக்கங்களுடன் நிறைய எடுகோள்களைத் தந்து அக்காலகட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு மற்றும் அதன் ஈழத் தமிழ் கண்ணோட்டம் அனைத்தையும்   ஒருங்கிணைத்து நான் எழுதிய புத்தகம் அது.அந்தப் புத்தகத்தை என் சொந்தச் செலவில் அச்சிட்டு வருவோர் போவோர்க்கு எல்லாம் இலவசமாக கொடுத்தேன்.

காலம் அறிந்து ஆற்றிய அந்த கழகப் பணிக்கு நீங்கள் காட்டிய மரியாதைகளுக்கு 
நன்றி! 
#ஈழம்_திமுக #teso_dmk #Eelam

"#ஈழத்தமிழரும்_கலைஞரும்"

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
14-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...