Monday, October 30, 2023

#*ரா.கிருஷ்ணசாமி நாயுடு*

#*ரா.கிருஷ்ணசாமி நாயுடு*



#*ஆர்கே*
 #ராவனாகிணா
#*தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் சீர்மிகு தலைவர்*.
—————————————
மனித நேய பண்பாளர் ராகிணா.
காமராஜரின் தோழர்…. 
அந்த காலத்தில் நட்போடு சைக்கிளில் காமராஜரை கிராம்களுக்கு அழைத்து செல்வர்…
தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் சீர் மிகு தலைவர்.
அமைச்சர் பதவி தேவையில்லை என காங்கிரஸ் ஊழியன் என்ற அடையாளம் போதும் என கட்சிக்கு உழைத்தவர்.
இன்று அவரின் 50 வது ஆண்டு நினைவுநாள் 




 ரா.கிருஷ்ணசாமி நாயுடு (ஜனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973)முன்னாள் மேலவை-சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைப் போராட்ட முக்கியமான தளபதி. ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த பி. ராமசந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 இல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின் போது சிறை சென்றார்.












இவர் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 1926இல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில், சேலம் பெ. வரதராஜுலு நாயுடு தலைமையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா. கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். 1959 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார்.[6]




15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமான செய்தி.

வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார். இவர் கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின், முதல் சட்டமன்றத்திற்கு 1952 இல் எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும்,1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும்,1962 சட்டமன்றத் தேர்தலில்,ராஜபாளையம்தொகுதியிலிருந்தும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இவருக்கு கடிதம் போட்டலும் பதில் கடிதம் எழுதுவார். எளிமையான வாழ்க்கை முறை…..

தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுதந்திரபோராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தமர் தலைவர் ரா.கி அவர்கள்.

சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி
பார்வையில் எளியோராகி பண்பில் உயர்ந்தோராகி
நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி
தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள் ராகி
நாணய விளக்கே ! ஓயா
நற்பணிக் குன்றே ! என்றும்
ஆணவமில்லா வேந்தே !
அயர்வில்லா தேசபக்தி.
நீணெடுங்காலம் கொண்டோய் !
நீ எமை விட்டுச் சென்று
நாணடந்தாலும் நாங்கள்
நாளெல்லாம் நினைப்போம் உன்னை.
-#கவிஞர்_கண்ணதாசன்

R. KrishnasamyNaidu
was former Member of the LegislativeAssembly.

R.Krishnasamy naidu Born : 05.01.1902. Died : 30.10.1973.

He was elected to theTamilNadulegislative assembly as anIndianNationalCongress candidate from Srivilliputhur constituency in 1957 election and from Rajapalayam constituency in1962 election

An ardent social worker and a keen co-operator;Agriculturist;interested in composing Tamilverses;reading books and hearing carnatic music.

Member Madras Legilative Assembly 1952- 67.

Joined in the Indian National Congress in 1922.

Underwent imprisonment for one year in 1930.

during the Civil Disobedience Movment.

President Tamil nadu Congress Committee. 1962.

President Srivilliputhur panchayath Board.

Chairman Estimates committee of the Madras Legislative Assembly.1960.


#ரா_கிருஷ்ணசாமிநாயுடு
#ஆர்கே

#ஸ்ரீவில்லிப்புத்தூர்
#தமிழநாடு_காங்கிரஸ்கமிட்டியின்_சீர்மிகுதலைவர்.
#RK
#R_Krishnasamynaidu

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-10-2023.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...