Monday, October 16, 2023

திமுக ஆட்சி -1 DMK misrule

#*திமுக ஆட்சி (1)*
—————————-
திமுக ஆட்சி மன்றத்தில் அமர்ந்திருக்கிறதா அல்லது தங்களின் வீட்டுமுற்றத்தில் அமர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

அண்ணா மற்றும் கலைஞர் காலத்தில் அமைப்புச் செயலாளர்கள் என்று திறமையான திமுகவின் மூத்தவர்களை நியமித்து கட்சியின் முழு அமைப்பையும் அவர்கள் திறம்பட நிர்வகித்து வந்தார்கள்.

முன்பு,பெருநகரம் முதல் சிற்றூர் கிராமங்கள் வரை  மேலிருந்து கீழ் திமுக வின் அமைப்பானது கிராம நிர்வாகம் ஒன்றியம் பேரூராட்சி இளைஞர் பாசறை என அதற்கானஅத்தனை கட்டுக்கோப்புகளையும் கொண்டதாக செயலாற்றி வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்று நிலைமை திமுகவின் குடும்ப அமைப்பைச் சுற்றி பின்னப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வேண்டியவர்களை என மெய்யநாதன், மதிவேந்தன்,  நாமக்கல் ராஜேஷ்குமார்   மறைந்த கலைஞருக்கு அறிமுகமற்றவர்கள் மந்திரி, எம்பி என பலருக்கு பதவிகள் இவர்களெல்லாம் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.

ஒரு காலத்தில் கன்னா பின்னாவென்று  திமுகவை விமர்சித்து திட்டிய செந்தில் பாலாஜி  இன்று திமுகவில் இருக்கிறார் கடுமையாக எதிர்த்து பேசிய சேகர் பாபு அங்கு தான் இருக்கிறார்.இப்படி திட்டியவர்கள் பலர் அவர்களுக்கு அருகே திண்டில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

அரசியல் என்றால் அதற்குரிய கம்பீரம்  மக்கள் மீதான கரிசனம் கட்சி வளர்ச்சி மீது மெய்யான நடைமுறை சார்ந்தவர்களைத் அருகில் வைத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய இத்தகைய சந்தர்ப்பவாதிகளை நம்புவது பலவகையான உள்கட்ட கோளாறுகளை ஏற்படுத்தும் 
 இந்தப் போக்கு அதன் அடிமட்டத்தை சிதைக்கும் என்றாலும்  இப்போது நடந்து கொண்டிருக்கும் உண்மை அதுதான். 
இந்த தவறுகளை அவர்கள் உணரும் போது காலம் கடந்துபோய்விடும். உழைத்தவர்கள் யாராக இருந்தாலும்   திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையிலும்    ஆட்சிக்கு வந்தவுடன்    ஒதுக்கி வைப்பது .
உழைத்தவர்களை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக   இருப்பவர்கள் .

யார் யார் திராவிட முன்னேற்றக் கழகத்தை    அசிங்கமாகவும் விமர்சனம் செய்பவர்களை   அருகில் வைத்துக் கொள்ளும்    குணம்  உடையவர்கள் .தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்தவர்கள் .
மிகவும் தரக்குறைவாக  பேசி,    புத்தகங்களை வெளியிட்ட   தற்குறிகளை வைத்துக்கொண்டு; அவர்கள், கடந்த  காலங்களில் கலைஞர் மீது எதிர் வினைகள்  ஆற்றியவர்களின், பேசியவர்களின்   எழுதிக் கொடுக்கும் பெயர்களை    பரிந்துரை செய்து    அவர்களுக்கு  பதவிகளை  வழங்குவதை தான்   முதல்வர் செய்கிறார். இதில் கலைஞர் கலைஞர் கொடும்பாவியை எரித்தவர்களுக்கு வாரிய தலைவர பதவி   இன்று திமுக வட்டாரமே பேசுகிறது .

இவர்களெல்லாம் யார் என நமக்குத் தெரியாது ஒரு புறம் இருக்கட்டும். இவர்களைப் பற்றி மறைந்த கலைஞருக்கும்கூடத் தெரியாது .

அதற்கு முக்கிய காரணமாக உள்ளிருந்தே செயல்படுபவர்கள்   முதல்வர் அவர்களின் நேர்முகச் செயலாளர்  தினேஷ்,    சுப வீரபாண்டியன்  போன்றவர்கள்  பலர் உடன்  இருந்து  இவற்றை வளர்த்து விடுகின்றனர்.

யார் யாரோவெல்லாம் மந்திரிகள் யார் யாரோவெல்லாம் எம்பி எம்எல்ஏக்கள்! எந்த அடிப்படைக் கடமை உணர்ச்சி இல்லாதவர்கள் கூட தங்களுடைய வசதி வாய்ப்பை வைத்து இந்தப் பதவிகளை வாங்கிப்பயன் அடைகிறார்கள்.

இந்த  குடும்ப விசுவாசிகள் திமுக வின் வரலாறு பற்றியோ அதன் நீண்ட கால போராட்டங்கள் பற்றியோ அதனுடைய தத்துவங்கள் பற்றியோ கொள்கைகள் பற்றியோ ஒரு விபரமும் அறியாதவர்கள். இல்லாமல் ஒரு அதிகார மட்டத்தில் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கட்சியின் உள் மற்றும் வெளி விவகாரங்களை கவனிக்கிறார்கள் என்றால் இன்றைய திமுக அதனளவில் முதல்வரின் குடும்பநலன் என்கிற அளவில் மட்டுமே சுருங்கி போய்விட்டது என்று அர்த்தம்.

கட்சியில் உழைத்தவர்கள் அதனுடைய பாரம்பரியத்தை பாதுகாத்தவர்கள் அதற்காக மாவட்டங்கள் தோறும் இன்னமும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லோரையும் முதல்வரின் குடும்பம் அதிருப்திக்கு உள்ளாக்கி கொண்டிருப்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஒரு பழைய திமுகவின் கடின உழைப்பாளி மற்றும் அதன் அறிவு தளம் மற்றும் கொள்கை தளங்களில்  காலங்களாக பணியாற்றியவன் என்கிற முறையில்  வருத்தம் அடைகிறேன். அதன் அடிப்படையில் தான் இந்த அதிகாரக்  குடும்பச் சுய லாபங்களை வெளியில் சொல்லியாக  வேண்டியிருக்கிறது.

வேறு யாரும் இதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. இதை எப்படி கட்சியின் ஜனநாயகம் என்று எடுத்துக் கொள்வது.
திமுகவின் பெயரால் ஆட்சிக்கு வரும்போது குடும்பத்திற்கு அப்பாற்பட்ட பொது நலன் பேணப்பட வேண்டும் ஆனால் இங்கு நடப்பது குடும்பத்தின் நலன்களுக்கு ஏற்ற விஷயங்களாக அனைத்தையும் முதலில் மாற்றிக் கொண்டுதான் பிறகு மற்ற பொது விஷயங்களில் தலையிடுகிறார்கள்.  பலவகையான நலத்திட்டங்கள் குறித்து பேசுவது போல வெளிக்காட்டி அதை நிறைவேற்ற இயலாமல் வெறும் விளம்பரங்களை தான் செய்து கொண்டிருக்கிறது இந்த அரசு.

கட்சியே ஒரு வணிகமயமான கார்ப்ரேட் லாப நோக்கத்தோடு தான் இயங்குகிறது.
பொது வாழ்க்கைக்கு வருபவர்களுக்கு இந்த ஆட்சி எந்த மதிப்பையும் அளிப்பதில்லை. இது பொது மக்களுக்குமான ஆட்சியும் இல்லை. வெறும் இலவசங்களில் விளம்பரங்களில் கண் துடைப்பு செய்கிறார்கள்.

எங்களை போன்றவர்கள் உழைப்பையும் உண்மையையும்  தலைவர் கலைஞர் அங்கு அறிவார்.  திராவிட முன்னேற்றக் கழக உண்மை தொண்டர்கள்  கட்டாயம் அறிவார்கள் அறிந்திருப்பார்கள்…
(தொடரும்)

#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
16-10-2023.


No comments:

Post a Comment