Thursday, October 5, 2023

’’அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ? எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.’’ - #*கம்ப நாட்டாழ்வான்* -

’’அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.’’

- #*கம்ப நாட்டாழ்வான்* -

குரங்கு என்றாலும்,,கோபமில்லை 
குரக்கு என்றாலும் தாபமில்லை,,
அனுமன் என்றாலும் மகிழ்வதுமில்லை !
எல்லாம்,,,அவனுக்கே என்றிருக்கும் போது,,
சில்லாய்ப் போகாதோ ? வரும் துயரெலாம்,,,,,,,

என்று தான் இத்தனை நாளிருந்தேன் !
எல்லாம்,,,,, 
நீயே என்றிருக்கையில்..... 
வா ! தாயே,,,,,,,,,,,,,,
அசோகவனம் விட்டு
வளநகர் கொண்டு சேர்க்கிறேன்,,,
ஸ்ரீராமன் காத்திருக்கிறார் ! என்கிறேன்,,,

வாயு புத்ரன் நான்,,,
என் தோளில் அமர்க தாயே !
இவ்வுலகம் விட்டு அவ்வுலகம் , பொன்னுலகமது கொண்டு சேர்க்கிறேன் ! என்றவனிடம்,,போய்,,,
சொல்லால் சுட்டது நியாயமா ? தாயே,,,,,,,,
சொல்லின் சுடுசரம் இந்த குரங்கு தாங்குமோ ?

இது குரங்கென்றுதானே ?
எண்ணிச் சொன்னீர்களம்மா !

இல்லை,,,,
இல்லையில்லை தாயே,,,,,,,,
இந்த குரக்கிற்கும் வலி தெரியும் தாயே !
இந்த குரக்கிற்கும் வழி தெரியும் தாயே,,, !

இந்தக் குரங்கினை நம்பிக்கெட்டவர்களில்லை தாயே !

அசோகவனத்து சீதையிடம்,,,
ஸ்ரீராமன் பேச வேண்டியதை அனுமக்குரங்கு பேசியது !

*கடந்த கால பணிகளில பயன் பெற்ற சில மனிதர்கள்*…
*இன்றும் உள்ளனர்*…


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...