Tuesday, October 3, 2023

#*தமிழக மணல் கேரளாவுக்குகடத்தல்*…. *கேரள கழிவுகளை இலவசமாகதமிழக எல்லையில்கொட்டல்*



—————————————
வருடம் முழுக்க நீர் ஓடும் 45  ஆறுகளில் கேரளாவில் கடந்த 1992 முதல் 38 ஆண்டுகளாக  மணல் குவாரிகள் எதுவும் இல்லை. ஒரு கைப்பிடி மணலை கூட ஆறுகளில் அள்ள விடாமல் கேரள அரசு இயற்கை வளத்தைப்  கவனமாக பாதுகாத்து பேணி வருகிறது.

ஆனால் 33 ஆறுகள் மட்டுமே உள்ள தமிழகத்தில், (அதாம்பா திராவிட நாட்ல) அறிவியல் முறைப்படி - இயற்கை மீண்டும் தன்னை  தகவமைத்துக் கொள்ளும் வகையில் எந்த விதியும் பின்பற்றாமல் 

சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு பக்கத்து மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டதால் 160 ஆண்டுகள் அள்ள வேண்டிய மணலின் அளவு, கடந்த 30 ஆண்டுகளில் ஆற்றின் அடிமட்டம் வரை அள்ளப்பட்டு விட்டது.

கேரளாவில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 ன் பணிகளுக்காக, தமிழக எல்லையோர மாவட்டங்களின் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது.

சிலிக்கா மணல் என்ற போர்வையில் ஆற்று மணல் அதிக அளவில் கடத்தப்படுவதுதான் நடைமுறை. சிலிக்கா மணல் என்பது கண்ணாடி மற்றும் ஓடுகளை உற்பத்தி செய்வதற்கான கொள்முதல் பொருளாக இருப்பதால், கனிம அடிப்படையிலான தொழில்கள் வழங்குவதன் கீழ் தடையில் இருந்து விலக்கு உள்ளது. முக்கியமாக கேரளாவின் தென் மாவட்டங்களுக்கு மாஃபியாக்களுடன் கைகோர்த்து 
மணல் கடத்தப்பட்டு, ஒரு லாரி லோடு ரூ.60,000- 75,000 க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

திராவிட மண் மட்டுமல்ல திராவிட மலைகளும் வரைமுறை இல்லாமல் கேரளத்திற்கு கடத்தப்படுகிறது. பதிலுக்கு இறைச்சி கழிவுகளையும், மருத்துவ கழிவுகளையும் இலவசமாக கேரளவாசிகள் அனுப்பி தமிழக எல்லையில் கொட்டுகிறார்கள்….

வாழ்க முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் கேரள முதல்வர் பினராயி விஜயன்…
இங்குள்ள சிபிஎம் என்ன சொல்கிறது…

- தமிழக எல்லைப் பகுதி செங்கோட்டை விவசாயிகளின் குரலாக வடிவேல் சுப்பிரமணியம்

#தமிழகமணல்_கேரளாவுக்குகடத்தல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-10-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...