Tuesday, October 24, 2023

#*மணல்குவாரி மாபியாகள்* *தூத்துக்குடி மாவட்டம்* *விளாத்திகுளம்,முத்துலாபுரம்பாலம் அருகே வைப்பாற்றில்*…. *மேல்நம்பிபுரம்* *அயன்வடமலாபுரம்*

#*மணல்குவாரி மாபியாகள்*
*தூத்துக்குடி மாவட்டம்* *விளாத்திகுளம்,முத்துலாபுரம்பாலம் அருகே வைப்பாற்றில்*….
*மேல்நம்பிபுரம்* *அயன்வடமலாபுரம்* 
—————————————

மாநில அரசுக்கும்  மாவட்ட நிர்வாகத்திற்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பொது மக்களின் வேண்டுகோள்.
தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் பாலம் அருகே மேல்நம்பிபுரம் அயன் வடமலாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வைப்பாறு பகுதிகளில் மணல் குவாரி அமைபதாற்கான பணிகளில் மிக தீவீரமாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இதற்கு முன்பு அதே பகுதியில் முந்தைய ஆண்டுகளில் மணல் குவாரி அமைத்து விதிமுறைகளுக்கு மீறி மணல் எடுத்ததன்  விளைவு அந்த சுற்று வட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு தண்ணீர் பஞ்சம் வந்ததோடு மட்டும் இல்லாமல் அந்த பகுதிகளில்  தோட்டம் வைத்து கிணறு மூலம் நீர் பாசனம் மூலம் விவசாயம்  செய்த பலர் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் மோசமான நிலை வந்துவிட்டது. இதற்கு எந்த சமூக போராளிகளும் அரசியல் வாதிகளும் குரல் கொடுப்பது இல்லை. இயற்கை வளத்தை சுரண்டும் மணல் குவாரி மாபியாகளுக்கு இதில் பாதிக்க போவது அப்பாவி பொது மக்களும் விவசாயிகள் மட்டுமே.
தமிழக அரசுகள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்லையிட்டு மணல் குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள்.சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். 
நிலத்தடி நீரை காப்போம் விவசாயத்தை காப்போம்

#மணல்குவாரி_மாபியாகள்
#தூத்துக்குடி_மாவட்டம்_முத்துலாபுரம்_பாலம்_அருகே_வைப்பாற்றில்….
#மேல்நம்பிபுரம்_அயன்வடமலாபுரம்
#விளாத்திகுளம்

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
23-10-2023.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...