Thursday, October 12, 2023

முரசொலி…❓

#முரசொலி பேஸ்புக்கை பக்கத்தை முடக்கி விட்டார்கள் என்ற செய்தியை ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும் இது வருந்ததக்க செயல் தான். கலைஞரின் பேனாவில் பிறந்த முதல் பிள்ளை முரசொலி. அதில்தான் வாழ்நாள் முழுக்க தனது அரசியல் பக்கத்தையும்  தனது மனதின் பக்கத்தையும எழுதி வந்தார்.

 சில வருடங்களுக்கு முன் கலைஞரை சகட்டுமேனிக்கு திட்டியவர்கள் விமர்சித்தவர்கள்  எல்லாம் இந்த முரசொலி வந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் தற்போது முரசொலி நாளேட்டிலும்  நடுப்பக்கத்தில் எழுதும் அளவிற்கு அவர்களுக்கு இடமும் 
தந்திருந்தது முரசொலியின் ஞாபகமறதி.

அந்த பிம்ப ஐரணி தான் இப்போது கலைஞரைப் புகழ்ந்து எழுதி எழுதி முரசொலியே முடக்கும் அளவிற்கு போய்விட்டது என்று நினைக்கிறேன். நான் மதிமுக வில் இருக்கும் போது கூட கலைஞரை விமர்சனம் பண்ணி இருக்கிறேன் அதை அவர் ரசித்திருக்கிறார். அது ஒரு அரசியல் நாகரிகம். இங்கு நேற்று திட்டி எதிர்வினை ஆற்றியவர்கள் ; அதே கையில் எழுதுபவர்கள் எல்லாம் ஊதாங்குழலை  வைத்துக்கொண்டு ஊதி ஊதித் தள்ளுகிறார்கள். பூசாரிகளைப் போல திமுகவுக்கு வேப்பிலை அடிக்கிறார்கள்.

சேது சமுத்திர திட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சனை, கச்சத்தீவுவிவகாரம், ஈழம்  போன்ற விவாதங்களின் போது எல்லாம் கலைஞர் என்னை  முரசொலியில் கட்டுரைகள், நூலாகவும எழுத சொல்வார் . பின் அதன் சாதக பாதகங்களை என்னுடன் அமர்ந்து கலந்தாலோசிப்பார். அன்று இவர்கள் இந்த விடயங்களில் கலைஞரிடம் உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு இறுக்கமானசிக்கலுற்ற நிலை பிணக்குதனமாக திமுகவை கலைஞரை சாடியவர்கள். இவர்கள் இன்றைய ஸ்டாலின் பரிவாரத்தில்
அறிவாலாயம் காக்கா கூட்டமாக சொந்த நலன் நாடி மாறிவிட்டனர். அன்று அது வேறு நாக்கு, இன்று இது 
புது நாக்கு என கூவுகின்றனர்.

இந்த முரசொலி முடக்கம் என்ற செய்தியை கேட்டவுடன் எனக்கு இந்த பழைய ஞாபகமெல்லாம் வந்து போகிறது.


No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".