Thursday, October 19, 2023

#இந்தியா முழுக்க அதானியின் ஏகபோகவளர்ச்சியை சிபிஎம் எதிர்க்கிறது! அதானியி விழிஞ்சம் துறைமுகம் கேரளாவின் கம்யூனிஸ்ட CPM ஆதரவு… மார்க்சிஸ்ட் ஆட்சி எப்படி இங்குஅதானிக்கு ஆதரவு நிலைப்பாடு?

#இந்தியா
முழுக்க அதானியின்
ஏகபோகவளர்ச்சியை சிபிஎம் எதிர்க்கிறது!

அதானியி விழிஞ்சம்
துறைமுகம் கேரளாவின் கம்யூனிஸ்ட CPM ஆதரவு…

மார்க்சிஸ்ட் ஆட்சி எப்படி இங்குஅதானிக்கு ஆதரவு நிலைப்பாடு? 

*கேரளாவின் கம்யூனிஸ்ட் (CPM)ஆட்சி நிலை*
—————————————
கம்யூனிச நாடுகள் கம்யூனிஸ ஆட்சிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற உலகின் பல பாகங்களில் இன்று தாராளவாத பொருளாதாரம் நிலவுகிறது போலும் !









யாரை ஆதரிப்பது என்ன செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு தேச வளர்ச்சிக்கு மாநில வளர்ச்சிக்கு அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஆதரவுகள் எல்லாம் உண்மையிலேயே கம்யூனிஸக் கொள்கைகளின் அடிப்படையைக் கொண்டிருக்கிறதா என்றால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவர்களின் வர்க்க 
பேதம் அரசியல் ….?

கேரளாவின் கம்யூனிஸ்ட் (CPM)ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிற முதல்வர் பினராய், இன்று ஒரு பக்கம் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் சிபிஎம் 
இருக்க; மறுபக்கம்  காங்கிரஸ் எதிராக அனுகுமுறை கேரளாவில் காங்கிரஸ் Vs சிபிஎம். இதை போலவே மே .வங்க நிலை காங்கிரஸ் Vs சிபிஎம், டிஎம்சி Vs சிபிஎம்  மற்றும் டிஎம்சி Vs காங்கிரஸ் என முக்கோண சிக்கல். திரிபுராவில் என்ன நிலைப்பாடு.

விஷயத்திற்கு வருகிறேன்.
இந்தியா முழுக்க அதானியின் ஏக போக வளர்ச்சியை சிபிஎம் எதிர்க்கிறது!

கரண் அதானியின் கைப்பிடித்து அன்பை அறிவிக்கும் பிணரய் விஜயன்.   மார்க்சிஸ்ட் கட்சியின் பரிணாமம் வியக்க வைக்கிறது..  இன்குலாப் சிந்தாபாத்.. ரத்தப் பதாகை  சிந்தாபாத்.  அதானியின் விழிஞ்சம் துறைமுகம் இப்ப இனிக்கிதா? எந்த வகையில் … சிபிஎம் கேரள ஆதரவு ஏடுகளில் அதானி ஆதராவாக சிபிஎம் முழு பக்க விளம்பரங்கள் வந்தன. ஏன் தீக்கதிரில் முழு பக்க விளம்பரம் தமிழகத்திலும் வந்தது. அதில் அதானி எதிர்த்தும் தீக்கதிரில் கட்டுரையும் உள்ளது (கீழே படங்கள்). இதுதான் தெளிவான பார்வையா?

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 14 கிமீ (8.7 மைல்) தொலைவில் உள்ள அதானியின் விழிஞ்சம் , மேற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் தூர கிழக்குப் பகுதிகளை இணைக்கும் சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பல் பாதையில் இருந்து சுமார் 10 கடல் மைல்கள் (19 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. இது இந்தியாவின் முதல் ஆழமான நீர் பரிமாற்ற முனையமாகும்.

#Vizhinjam is a region located in the city of #Thiruvananthapuram, the capital of the state of Kerala in India. It is located 16 km south west from the city centre and 17 km south of #Trivandrum International Airport along NH66. 

கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும். இந்தியாவின் சமீபத்திய துறைமுக திட்டம் வழக்கமான பொருளாதார, சமூக மற்றும் கலாசார சர்சைகளில் சிக்கியுள்ளது. அதானி துறைமுகம் என பிரபலமாக அறியப்படும் கேரள அரசின் 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள துறைமுகத் திட்டமான விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி போராட்டக்காரர்கள் கட்டுமானத்தை நிறுத்தியது முதல் குழப்பச் சூழல் நிலவுகிறது. கடந்த வார இறுதியில் துறைமுகப் பகுதியில் அலை தடுப்பான்கள் கட்டுமானத்திற்காக கிரானைட் கொண்டு வந்த லாரிகளை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் காவல்நிலையத்தை தாக்கியதில் வன்முறை வெடித்தது. வன்முறை மற்றும் அதற்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கை தொடர்பான அறிக்கை குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சி. அவர்கள் எந்த வேடத்தில் வந்தாலும், அவர்களின் எண்ணம் நிறைவேறாது” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

ஒருவேளை இது சரி என்றால் தனது மாநிலத்தில் மட்டும் அதானியின் முதலீட்டை வரவேற்கிறார்! அதற்கு நிலம் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார்!இது எப்படி சாத்தியமாகிறது!அல்லது இதை எப்படிப் புரிந்து கொள்வது.

தனியார் ஏகபோக முதலீடுகளை ஆதரிக்கும் இவர்கள் எப்படி கம்யூனிஸ கொள்களை நிறைவேற்ற முடியும். பொதுவுடமை சித்தாந்தத்தை பிழிந்து எண்ணெய் எடுத்து விட்டு வெறும் புண்ணாக்கு 
ஆக்கிவிட்டார்கள் . மதவாத அடிப்படைவாத்தை நீக்குவோம் என்று சொல்கிறவர்கள் தங்களுடைய சித்தாந்த அடிப்படைகளை மீண்டும்  மதம் போலத்தான்  பேணுகிறார்கள் என்று சொன்னால் அவர்களுக்கு கோபம் வருகிறது
 மதமும் மார்க்ஸீயமும் ஒன்னு அதை அறியாதவன் வாயில் மண்ணு என்று சொன்ன கோவை ஞானி தான் ஞாபகத்தில் வருகிறார்.

#அதானியின்_விழிஞ்சம்_துறைமுகம்
#மார்க்சிஸ்ட்_ஆட்சி_எப்படி_இங்குஅதானிக்கு_ஆதரவு_நிலைப்பாடு?
#விழிஞ்சம்_துறைமுகம் #சிபிஎம்
#CPM  #Villinjamport
#AdaniGroup_Vizhinjam_Port
#Trivandrum

K.S. Radhakrishnan 
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...