Saturday, October 28, 2023

#ராஜராஜ சோழனின்சதயவிழா #தஞ்சைப்பெரிய கோயில் #Peruvudayar Temple

#ராஜராஜ சோழனின்சதயவிழா  
#தஞ்சைப்பெரிய கோயில் 
#Peruvudayar Temple 
——————————————
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றம் என்றார் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள்.

ராஜராஜ சோழனின் சதய விழா  நடந்திருக்கிறது.
ஒரு அமைச்சர்களோ அதிகாரிகளோ உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை இவர்கள் எல்லாம் அங்கிருந்துதான் அரசியல் அதிகாரத்தின் பாடம் கற்றுக் கொண்டவர்ரகள். அங்கு இருந்துதான் ஜனநாயகத்தை கற்றுக் கொண்டார்கள். அங்கிருந்துதான் குடவோலை முறை என்று சொல்லக்கூடிய  மக்களின் வாக்களிப்பு முறையைக்கற்றுக் கொண்டார்கள். 

ஆனால் இன்று அவர்களெல்லாம் நவீன சோழர்கள் ஆகிவிட்டார்கள். தாங்கள் பெற்ற விழுமியங்களை தாங்கள் பெற்ற அறிவை வைத்து பிழைப்பு வாதம் பேசக்கூடிய இவர்கள் அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.

அத்தகைய ஆட்சி முறையை நவீன காலத்தில் சுலபமாக பெற்றுக் கொண்டு இன்று அதிகாரத்தில் லயிப்பவர்கள் அற்ப மமதையில் மேடை தோறும் பேசி மீண்டும் அதே நவீன முடி ஆட்சி மன்னர்களாகி விடுகிறார்கள் . இன்றைய ஆட்சி முறை மாவட்டம் தோறும் தமிழகத்தின் பிராந்திய குறுநில மன்னர்களின் ஆட்சி போல தான் இருக்கிறது. என்ன ஒரு அரசியல் அதிகாரம் !ஏகப்பட்ட அதிகார மட்ட விசுவாசிகள் அவர்களுக்கு  கீழே பன்னாட்டு கூட்டு வணிகத்தில் தங்கம் பொன் நிலம் நவீன அந்தப் புரங்கள் என்று வாழ்க்கை மிக அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. ..

ராஜராஜன் எழுப்பிய அல்லது தமிழ் சமூகம் தங்களுடைய வரலாற்று பாத்திரங்களை இந்த உலகம் அறியக்கூடிய. அளவில் நிகழ்த்திக் காட்டிய பெரும் சாத்தியங்களை ஒரு கிஞ்சித்தும் கூட நிறைவேற்ற இயலாத இந்த அற்ப கூட்டம் அதே ராஜ ராஜனின் விழுமியங்களை மறந்து விட்டு அதன் வழியாக கிடைத்த அனுகூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதே மன்னர் பரிபாலணம் தான் பண்ணுகிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லவும் வேண்டுமா.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்,தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டினார். பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இங்கும், கட்ட பொம்மனின்  பஞ்சாலங்குறிச்சி சென்றால் ராசி இல்லாமல் சிக்கல்கள் ஏற்படும் சிலரின் பதவி மோகம்.

கான மயிலாட வான்கோழி தன் சிறகை விரிக்குமாம்.

ஆதார விழுமியங்களையும் அறங்களையும் இழந்த கூட்டு சமூக வாழ்க்கை எந்த பிராந்திய பிரதேசத்தில் இருந்தாலும் அவை இறுதியில் அழிந்து ஒழியும் என்பதுதான் வரலாறு .ராஜராஜ சோழனை அவனது முழு வரலாறையும் விழுங்கிய ஏப்பம் விட்ட ஒரு குள்ளநரி கூட்டம் தான் இன்று தலைமை வகிக்கிறது. பெரியார் கூத்தாடிகள் என்று திட்டுவார். அவரையும் விழுங்கி ஏப்பம் விட்டு இந்த கூத்தாடிகள் கொழிக்கிறார்கள்.

ஆரியமாம் திராவிடமாம். இந்த முரண்பாட்டில் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்று தான் பழமொழியும் இருக்கிறது.  எல்லாம் வெட்டி பேச்சுக்கள்….

#ராஜராஜசோழன்
#தஞ்சைபெருடையார்கோவில்

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...